திரைப்பட நடிகர், நடிகை குஷ்பூக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் அரங்கேறியது நினைவு இருக்கலாம்.இதே போல் ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஐஸ்வரர்யா ராய் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் என பல்வேறு பிரபலங்களுக்கு கோயில் கட்டி அழகு பார்த்த நிகழ்வுகளை நாம் படித்திருக்கிறோம். ஆனால் ஒரு கட்சியின் தலைவருக்கு கோயில் கட்ட முயற்சி செய்திருக்கும் எம்.எல்.ஏ என்கிற செய்தி ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. 

 ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அவரது கட்சி எம்.எல்.ஏ.,வெங்கட்ராவ் கோவில் கட்ட திட்டமிட்டு பூமி பூஜை மேற்கொண்டுள்ளார்.இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கோபுலாபுரம் தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., தலாரி வெங்கட்ராவ், ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து வெங்கட்ராவ் பேசும் போது... "முதல்வர் ஜெகன்மோகன் நலத்திட்டங்களை வருங்கால தலைமுறையினர் நினைவு கூறும் விதமாக அவரை ஒரு கடவுளாக கருத வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கோயில் கட்டப்படுகிறது. மக்களின் அவல நிலையை அறிந்து கொள்ள நாட்டில் யாரும் செய்யாத வகையில் ராஜசேகர ரெட்டியும் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பாத யாத்திரை மேற்கொண்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதனையே நல திட்டங்களாக அறிவித்து செயல்படுத்தி வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே ஒய்.எஸ்., குடும்பத்தை கடவுள் பூமிக்கு அனுப்பியுள்ளார். எனவே எந்தவொரு தீய சக்திகளும் ஜெகன்மோகனை நெருங்காமல் தடுக்கும் நோக்கத்துடன் அவருக்கு கோவில் கட்டுகிறேன்.