ஓபிஎஸ் சசிகலாவிடையே ஏற்பட்ட அதிகார சண்டையில் தங்களுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களை தக்க வைத்துக்கொள்ள இரு தரப்பினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கல்பாக்கத்தை அடுத்த கூவத்துரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த எம்எல்ஏக்கள் கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என புகார் எழுந்துள்ளது. ரவுடிகளின் பிடியில் அவர்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு சில எம்எல்ஏக்கள் அங்கிருந்து தப்பிவந்து ஓபிஎஸ்சிடம் சரணடைந்தனர்.பல்வேறு அரசியல் கட்சியினரரும் இதற்கு கடும்த எதிர்ப்புத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கூவத்துர் விடுதியில் உள்ள ஒரு எம்எல்ஏ, தங்களை ரவுடிகள் தாக்கி வருவதாகவும் உடனடியாக தங்களை மீட்க வேண்டும் என கதறி எழுதியுள்ள கடிதம் வெளியாகியுள்ளது.

அதில் நாங்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் ரவுடிகளால் கொடுமைப்படுத்தப் படுகிறோம்.எங்களிடம் செல்போன், டிவி, செய்தித்தாள் என எதுவுமே கொடுக்கப்படவில்லை.. ரவுடிகள் அடிக்கடி அடித்துத் துன்புறுத்துகின்றனர்…நேற்று ஒரு எம்எல்ஏ தாக்கப்பட்டதில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனடியாக தங்களை மீட்டு காப்பாற்றும்படி ஆளுநருக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
