Asianet News TamilAsianet News Tamil

நான் பயந்தாகொளி இல்லை… ஓடி ஒளிய மாட்டேன்… தில்லாக கருணாஸ் பேட்டி!

நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரை கண்டு பயப்படுவதாக கூறினார்.

MLA Karunas Press meet
Author
Chennai, First Published Sep 21, 2018, 11:54 AM IST

நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரை கண்டு பயப்படுவதாக கூறினார். MLA Karunas Press meet

மேலும், காவல்துறை அதிகாரி ஒருவரை, முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்கும்படி சவால் விடுத்தார். ஜாதி ரீதியான பல்வேறு சர்ச்சை கருத்துக்களை அவர் பேசிய பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து அவர் மீது போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைதொடர்ந்து அவர் தலைமறைவாக இருப்பபதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், எம்எல்ஏ கருணாஸ், சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

நான் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவன். இதனால், என் மீது வழக்கு போடுகிறார்கள். எனது தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். நான் சமுதாய பிரச்சனைக்காக போராடுகிறேன். ஆனால், அதை சட்டமன்ற பிரச்சனையாகக மாற்றி திசை திருப்பிவிடுகிறார்கள். போலீசாரை பகைத்து கொண்டு நான் எனது தொகுதிக்கு செல்வதில்லை. என் மீது எனது சமுதாய மக்களிடமே பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். நான் யாரிடமும் கையேந்தவில்லை. MLA Karunas Press meetMLA Karunas Press meet

இதுவரை கோடம்பாக்கம் காவல்நிலையம், விருகம்பாக்கம் காவல்நிலையம் சென்றதில்லை. எந்த இடத்திலும் கட்டப்பஞ்சாயத்து செய்தது இல்லை. என் மீது கூறப்படும் குற்றச்சாட்டை கோர்ட்டில் சந்திப்பேன். நான் பயந்தவன் இல்லை. ஓடி ஒளிய மாட்டேன். எதையும் நேருக்கு நேராக சந்திப்பேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios