பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும்! என மூன்றாவது நீதிபதி கொடுத்திருக்கும் அதிரடி தீர்ப்பை சேனல்கள் வழியே பரப்பன சிறையிலிருந்து லைவ்வாக கவனித்திருக்கிறார் சசிகலா.

பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும்! என மூன்றாவது நீதிபதி கொடுத்திருக்கும் அதிரடி தீர்ப்பை சேனல்கள் வழியே பரப்பன சிறையிலிருந்து லைவ்வாக கவனித்திருக்கிறார் சசிகலா. அவர் ஒருவிதத்தில் இதை எதிர்பார்த்திருந்தார் என்றாலும் தீர்ப்பு பெரும் சறுக்கலை தந்திருப்பதாக அதிர்ந்துவிட்டாராம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிறையில் இருக்கும் சசியை வழக்கமாக சந்திக்கும் நபர் ஒருவரிடம் தீர்ப்பு பாதகமாக வந்தால் என்னென்ன நடக்க வேண்டும்! என்று சொல்லியிருந்த சசி...” 

ஜட்ஜ்மெண்ட் எப்படி வேணாலும் இருக்கலாம். சபாநாயகரின் முடிவு சரின்னும் தீர்ப்பு வரலாம். அப்படி வந்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை கவனிச்சு பண்ண சொல்லுங்க உங்க தலைவரை (தினகரனை.) தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு, மீடியா வெளிச்சம் இருக்குறதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் ஒரு தீர்ப்பின் மூலம் எல்லாமே மாறிடும் தலைகீழா. ஏன் அவ்ளோ பெரிய ஜாம்பவான் அக்காவே, குன்ஹாவின் ஒரு தீர்ப்பால் தலைகவிழலையா, அவங்களோட முதலமைச்சர் அதிகாரம் கைவிட்டு போகலையா?

அதனால தீர்ப்பு பாதகமாக வந்தால் தினகரனை எதையும் யோசிச்சு, அடக்கமா, கமுக்கமா செயல்பட சொல்லுங்க. டெல்லியையோ, ஆளும் தரப்பையோ ஏதாச்சும் கிண்டலா பேசி நீதிமற அவமதிப்பு மாதிரி எதையும் வாங்கிக் கட்டிக்க வேண்டாமுன்னு சொல்லுங்க. மொதல்ல கையில இருக்கிற 18 எம்.எல்.ஏ,க்களையும் வட்டம் போட்டு வளையத்துக்குள்ளே வெச்சுக்க சொல்லுங்க. அதுல ஒருத்தர் நகர்ந்தாலும் சிக்கலாயிடும். ஒரு குழந்த வாந்தி எடுக்குறத பார்த்தா அடுத்தடுத்த குழந்தைங்க வாந்தியெடுக்கும். அது மாதிரியான கதையாகிட போகுது. 

எல்லாத்துக்கும் மேலே, இனி முக்கிய முடிகள் எடுக்கிறப்ப ‘சின்னம்மா இருக்கிறாங்க, அவங்களை மறக்கவேண்டாம்.’ன்னு மனசுல வெச்சுக்கிட்டு முடிவெடுக்க சொல்லுங்க.” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். சசி டவுட் பண்ணியது போலவே தீர்ப்பு பாதகமாக வந்திருக்கிறது. ஆனால் சசி எதிர்பார்ப்பது போல் தினகரன் மாறி நடப்பாரா?