கடந்த வாரம் வங்கக் கடலில் இரு சரக்கு கப்பல்கள் மோதிக் கொன்டதால் வங்கக் கடல் பகுதியில் கலந்துள்ள எண்ணெய் படலங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த எண்ணெய்க் கசிவால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ள நிலையில் அந்த படலம் தற்போது 80% அகற்றப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள படலங்கள் இன்னும் 3 நாட்களில் அகற்றப்படும் என அறிவிக்கக்கட்டுள்ளது.

இந்நிலையில் எண்ணூர் துறைமுகம் பகுதியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டு அப்பகுதி மக்களை சந்தித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது கடலில் கச்சா எண்ணெய் கலந்துள்ளதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த எண்ணெய் படலம் 32 கிலோ மீட்டர் அளவுக்கு பரவியுள்ளதால் மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் செயல்பட்டுவரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பாதிக்கப்படுமா? என அச்சம் தெரிவித்தார்.

மாநில அரசு உடனடியாக இதில்ர கவனம் செலுத்தி நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றார்.

மீனவர்களுக்கு பாதிப்பு,சுற்றுச்சூழல் பாதிப்பு, தற்போது எண்ணெய் படலங்களை அகற்றும் செலவு என அனைத்தையும் கப்பல் நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்த மு,க,ஸ்டாலின் சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இப்பிரச்சனை குறித்து ஏற்கனவே சட்டப் பேரவையில் பேசியிருப்பதாகவும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.