Asianet News TamilAsianet News Tamil

ஐ.நா.மனித உரிமை ஆணைய கூட்டம்… மு.க.ஸ்டாலினுக்கு பங்கேற்க அழைப்பு…

m.k.staline
mkstaline 3cnepd
Author
First Published May 2, 2017, 8:06 AM IST


ஜெனீவாவில் அடுத்த மாதம் 12-ந் தேதி தொடங்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக திமுக  தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , திமுக  தலைவர் கருணாநிதி வழங்கிய அறிவுரைகளின்படி, கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் சமர்ப்பித்த ‘டெசோ’ மாநாட்டுத் தீர்மானங்கள் இந்த ஆண்டுக்கான ஐ.நா. ஆண்டறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா.சபையின் 2017-2018-ம் ஆண்டு அறிக்கையில், ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து திமுக  மற்றும் ‘டெசோ’ அமைப்பு இணைந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் பதிவாகி, வெளியிடப்பட்டு இருப்பதன் மூலம், ஈழ மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக திமுக  தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலைப்பாடு உலக அரங்கில் ஆணித்தரமாக வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

இதனைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன், தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு  கடந்த 17ஆம் தேதி  எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள தமிழீழ அரசாங்கத்தின் 2-வது அரசவையின் 7-வது நேரடி அமர்வில், மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். 
mkstaline 3cnepd

அதேபோல், ஜெனீவாவில் வரும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடைபெறவுள்ள 35-வது மனித உரிமைகள் ஆய்வுக் கூட்டத்தில் தமிழீழ மக்களின் பிரச்சினைகள், விடுதலைக்கான தீர்வுகள் குறித்து மு.க.ஸ்டாலின் உரையாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உலகளாவிய தமிழர்களிடம் எழுந்துள்ளது எனவும் திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,. 

திமுக  செய்தி தொடர்பு செயலாளர் வழக்கறிஞர்  கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மு.க.ஸ்டாலினின் பங்கேற்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில்

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios