மாஜி அமைச்சரும், அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வுமான செம்மலை ‘ஸ்டாலினும் தினகரனும் ரகசிய நட்பில் இருக்கிறார்கள்.’ என்று செம்ம விமர்சனத்தைக் கொளுத்திப் போட்டிருக்கிறார். இந்நிலையில், வெற்றிவேல் சொல்லியிருக்கும் கருத்துக்களோ குழப்பத்தை கிளப்புவதோடு, செம்மலை சொல்வது உண்மைதானா? என்று  சந்தேகப்படவும் வைத்துள்ளன. 

என்ன பிரச்னை?...... தினகரனின் ஆதரவாளர்களாக செயல்படுவதாக அ.தி.மு.க.வின் மூன்று எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி அக்கட்சியின் கொறடா மனு அளித்திருந்தார். இந்நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோமென்று ஸ்டாலின் உறுமினார். இதை வைத்துத்தான் செம்மலை ‘ரகசிய நட்பு’ எனும் பதத்தை சொல்லி, இருவரையும் போட்டுத் தாக்கினார்.

 

இந்த சூழலில் தினகரனின் வலது கரமும், அ.ம.மு.க.வின் முக்கிய பில்லரும், ஆளுங்கட்சியின் அதிகார மையங்களைப் பற்றி அடிக்கடி ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி செய்பவருமான வெற்றிவேல் தனது திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். அதில்....“அந்த மூன்று எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். இந்த சூழலில் அவர்களை பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஆனால், ஸ்டாலின் ‘சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்’ என்று சொன்னது தவறானது. 

காரணம்?...முப்பத்தைந்து எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் தீர்மானத்தை கொண்டு வர முடியும். ஆனால் சபாநாயகரை வீழ்த்தும் முயற்சியில் வெற்றி பெற வேண்டுமல்லவா! அது கடினம். எனவே இந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு கூடுதல் எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வுக்கு கிடைத்தால் அந்த சமயத்தில் ஸ்டாலின் இதை கொண்டு வரலாம். வெற்றியும் கிடைக்கலாம். ஆனால் இப்போது செய்வது விபரமற்ற செயல். காரணம், ஒருமுறைன் இந்த தீர்மானத்தை கொண்டுவந்து செயல்படுத்திவிட்டால் பிறகு ஆரு மாதங்களுக்கு மறு தீர்மானம் கொண்டு வர முடியாது. எனவே விபரம் தெரியாமல் பேசுகிறார் ஸ்டாலின்.” என்றிருக்கிறார்.
 
இதைத்தன் அ.தி.மு.க. புள்ளிகளும், அரசியல் பார்வையாளர்களும் கையிலெடுத்துக் கொண்டு “வெற்றிவேல் என்ன ஸ்டாலினை கிண்டல் செய்கிறாரா? அல்லது எப்போது இந்த தீர்மானத்தை கொண்டு வரவேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என்று வகுப்பெடுக்கிறாரா! வெற்றிவேலின் பேச்சைப் பார்த்தால் ஸ்டாலினுக்கு ஐடியா கொடுப்பது போலவேதான் இருக்கிறது. அப்படியானால் ஸ்டாலின் - தினகரன் ரகசிய உறவு உண்மைதான் போல.” என்கிறார்கள். தினகரன்...எதாச்சும் சொல்லுங்க இத பத்தி! ச்சும்மா சிரிச்சுனே இருந்தா எப்படி?