Asianet News TamilAsianet News Tamil

ரஜினியை சந்திக்க தாயாராகும் அழகிரி… புதிய கட்சியில் இணைவாரா?

M.K.Alagiri ready to meet Rajinikanth
M.K.Alagiri ready to meet Rajinikanth
Author
First Published Jan 4, 2018, 8:34 AM IST


புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள  நடிகர் ரஜினிகாந்த்தை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், விரைவில் அவரை சந்திக்க உள்ளதாகவும் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் புதிய கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். இதனை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். ஆன்மீக அரசியல் என்ற அடிப்படையில் தனது கட்சி இருக்கும் என ரஜினி அறிவித்துள்ளதமால், இடது சாரிகள், சீமான், திருமாவளவன் போன்றோர் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

M.K.Alagiri ready to meet Rajinikanth

டி.டி.வி.தினகரன் அவரை வரவேற்றாலும், ரஜினி குறித்து சற்று கிண்டலாகவே பேசி வருகிறார். வைகோவைப் பொறுத்தவரை பொத்தாம்பொதுவாக வரவேற்றுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் போன்றோரும் வரவேற்பதாக தெரிவித்தாலும், ரஜினியை பாஜக இயக்குகிறதோ என்ற சந்தேகம் இருந்து வருகிறது.

அதிமுக தங்கள் பிரச்சனைகளை தீர்க்கவே  அல்லாடிக் கொண்டிருப்பதால், ரஜினி குறித்து பெரிதாக அக்கட்சித் தலைவர்கள வாய் திறக்கவில்லை. அதே நேரத்தில் ரஜினி குறித்து ஏதாவது  பேசி அவரை பெரிய ஆளாக ஆக்கிவிடவேண்டாம் என இபிஎஸ் தனது அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

M.K.Alagiri ready to meet Rajinikanth

ரஜினி நேற்று கருணாநிதியை சந்தித்துச் சென்ற சில நிமிடங்களில் பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், ஆன்மீக அரசியல் மூலம் யாராவது திராவிட அரசியலை அழிக்க நினைத்தால் அசர்கள் தோற்றுப் போவார்கள் என ரஜினிக்கு ஒரு பன்ச் வைத்தார்.

M.K.Alagiri ready to meet Rajinikanth

ஆனால் ரஜினிக்கு ஆதரவு தருவதற்கு ஒருசில தலைவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி என கூறப்படுகிறது.

இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக மு.க.அழகிரி நேற்று காலை கோபாலபுரத்திற்கு வந்தார். அங்கு அவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  மு.க.அழகிரி ரஜினிகாந்தை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். இதுவரையில் நேரம் கிடைக்கவில்லை. சந்திக்க நேரம் கிடைத்ததும், அவரை சந்திப்போன் என தெரிவித்தார்.

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்தபோது மு.க.அழகிரி அதனை வரவேற்றார். மேலும் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூற இருப்பதாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனால் அழகிரி கண்டிப்பான ரஜினியிடம் செல்வார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதே போன்று தென் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் ரஜினியின் பின்னால் போக தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios