விஸ்வாசத்திற்கு சொந்தகாரர் துரைமுருகன். எதிர்க்கட்சியாக இருந்த போதும் உரிமையோடு பழகுபவர். சுவாசம் நின்று போனாலும் விசுவாசம் விட்டுப் போகக்கூடாது என்ற கருத்துக்கு உதாரணமாக இருப்பவர் துரைமுருகன்

எனக்கு வழிகாட்டியாக இருப்பவர்தான் துரைமுருகன் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளாக செயலாற்றி பொன்விழா காண்கிறார் அமைச்சர் துரைமுருகன். அவரைப் பாராட்டி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘’எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் அப்படியே வெளிப்படுத்துபவர். கட்சிக்கும், ஆட்சிக்கும் உறுதுணையாக இருப்பவர் அமைச்சர் துரைமுருகன். 

பொன்விழா நாயகராக திகழ்கிறார் துரைமுருகன், புன்னகை எப்போதும் அவரது முகத்தில் இருக்கும். சட்டப்பேரவை கூட்டத்தை அழ வைக்க நினைத்தால் அழ வைப்பார், சிரிக்க வைக்க நினைத்தால் சிரிக்க வைப்பவர் துரைமுருகன். என்னை இளைஞராக பார்த்ததாக துரைமுருகன் கூறுவார். ஆனால் நான் அவரை கலைஞர் மற்றும் பேராசிரியர் இடத்தில் வைத்து பார்க்கிறேன்.

கட்சிக்கும் ஆட்சிக்கும் துரைமுருகன் உறுதுணையாக இருக்கிறார். 100 ஆண்டுகால வரலாற்றில் 50 ஆண்டுகாலம் சட்டப்பேரவையை அலங்கரித்து கொண்டுள்ளார் துரைமுருகன். கலைஞருக்கு பக்கத்தில் மட்டுமல்ல, அவரது மனதிலும் ஆசனம் இட்டு உட்காந்து இருப்பவர் அமைச்சர் துரைமுருகன். கலைஞர், பேராசியர் மறைவுக்கு பிறகு எனக்கு வழிகாட்டியாக இருந்து கொண்டிருப்பவர் துரைமுருகன்; எந்த துறைகளை கொடுத்தாலும் முத்திரை பதிப்பார்” எனத் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் புகழ்ந்து பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த துரைமுருகன் கண்கலங்கினார்.

”விஸ்வாசத்திற்கு சொந்தகாரர் துரைமுருகன். எதிர்க்கட்சியாக இருந்த போதும் உரிமையோடு பழகுபவர். சுவாசம் நின்று போனாலும் விசுவாசம் விட்டுப் போகக்கூடாது என்ற கருத்துக்கு உதாரணமாக இருப்பவர் துரைமுருகன் ” என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனும் புகழ்ந்து பேசினார்.