"தம்பி போற போக்க பாத்தா பா. சிதம்பரத்த தூக்கிருவானுங்க போல நான் டெல்லி வரல ராமச்சந்திரா போறேன்...! அண்ணே நான் வேணா டெல்லி ப்ரோகிராம் கேன்சல் பண்ணிட்டு அவசரமா லண்டன் டிக்கெட் போட்டு கிளம்பிறவா?" என நெட்டிசன்கள் நேற்று சாயங்காலமே கலாய்த்ததும், தற்போது திமுகவிடமிருந்து இப்படியான ஒரு அறிவிப்பு வெளியானது நெட்டிசன்கள் சரியாக கணித்ததாக சொல்லப்படுகிறது.

டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் 14 கட்சிகளின் ஆதரவுடன் திமுக ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தது. இந்த செய்தியை மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாக மக்களவையில் இடம் பெற்றுள்ள திமுக, பிரதமர் மோடியின் காஷ்மீர் முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாக பாகிஸ்தான் வானொலி அறிவித்துள்ள நிலையில், ப.சிதம்பரம் சிதம்பரத்தை வீடு புகுந்து தூங்கியதால் திமுக ஜகா வாங்கிய  இந்த தகவலை எப்படி சொல்லப்போகிறதோ பாகிஸ்தான் வானொலி என திமுகவினர் விழிபிதுங்கியுள்ளனர். 

டெல்லியில் நடைபெற்று வரும் மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் போராட்டத்தில், அதன் தலைவர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ளாதது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோஷத்தோடு திமுக சார்பில் 15 கட்சிகளுக்கு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தேச  ஒற்றுமைக்கு எதிரானதாக பார்க்கப்படும் இந்த போராட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்ளக் கூடாது என கட்சியின் முக்கிய தலைவர்களும் ஸ்டாலின் நலம் விரும்பிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தான் ஸ்டாலின் டெல்லியில் நடைபெறும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளார். திமுக ராஷ்ட்ரிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள தலைவர்கள் விடுவிக்க வேண்டும், என்பதும் முக்கிய கோரிக்கைகளாக இருந்தது.

 இந்த காஷ்மீர் சூட்டுக் இடையேதான் மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலிருந்து துரத்து துரத்துவேனா துரத்தி சென்ற சிபிஐ மற்றும் அலமாக்கத்துறை அதிகாரிகள் சுவர் எகிறி குதித்து சிதம்பரத்தை செய்தனர்.

மோடி அரசு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மிகுந்த ஆக்ரோஷத்தோடு செயல்படுவதால் தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்க வேண்டாம் என்றும் ஸ்டாலினுக்கு அவரது நலம் விரும்பிகள் ஆலோசனை கூறியதாக தெரிகிறது. அதனடிப்படையிலேயே இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமல்ல, மாநிலங்களவை எம்பி வைகோவும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருப்பதால் இந்த போராட்டம் அவ்வளவு வீரியமாக இருக்காது என கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் நினைக்கிறார்களாம்.

திமுக ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில், திமுக சார்பாக அக்கட்சியின் எம்பிக்கள் குழு தலைவர் டி ஆர் பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி, ஜனதா தளத்தை சேர்ந்த சரத்யாதவ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் தினேஷ் திவேதி, காங்கிரஸ் கட்சியின் குலாம்நபி ஆசாத், திமுகவின் கணேசமூர்த்தி எம் பி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

"தம்பி போற போக்க பாத்தா பா. சிதம்பரத்த தூக்கிருவானுங்க போல நான் டெல்லி வரல ராமச்சந்திரா போறேன்...! அண்ணே நான் வேணா டெல்லி ப்ரோகிராம் கேன்சல் பண்ணிட்டு அவசரமா லண்டன் டிக்கெட் போட்டு கிளம்பிறவா?" என நெட்டிசன்கள் நேற்று சாயங்காலமே கலாய்த்ததும், தற்போது திமுகவிடமிருந்து இப்படியான ஒரு அறிவிப்பு வெளியானதை வைத்து பார்க்கையில், மோடியின் அதிரடி வேட்டையில் சிக்காமல் இருக்க ஸ்டாலினின் ஜூட் விடும் பிளான் தான் என நன்றாக தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.