சட்டசபை வளாகத்தில் தாறுமாறாக  பேட்டி கொடுப்பவர் தான் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வுமான விஜய தரணி, எப்போதுமே அதிரடியாகவும், ஆரவாரத்தோடவும் சட்டசபைக்கு வருவார். ஆங்கிலத்திலும் செம்ம ஸ்டைலாகவும் பேசி  அசத்துவார். விஜய தரணி வந்தாலே அந்த இடமே பாசிட்டிவ் வைப்ரேஷன் பரவியே இருக்கும் அப்படி ஒரு பளீச்.

சட்டசபைக்குள் நுழையும் விஜயதரணியை பார்த்த உடனேயே கேமராவின் கண்கள் அவர் பக்கம் திரும்புவது வழக்கம். பெண் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் இருந்தாலும் விஜயதாரணிதான் சட்டசபையில் சென்டர் ஆஃப் த அட்ராக்சன்.

ஒரு பேட்டியில் கூட விஜய தரணி என்றால் மேக்கப் போட்டுக் கொண்டு வருகிறீர்கள் எனக் கேட்டதற்கு,  மேக்கப் பெண்களின் இயற்கையான இயல்பு, தப்பு இல்லை. ஆண்களின் இயல்பு ஆண்களுக்கு தெரியும், அதேமாதிரி இது பெண்களுக்கு தான் புரியும் எனக் கலக்கலாக பதிலடி கொடுத்தார். தொலைக்காட்சிகளில் நடக்கும் அரசியல் விவாத நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சி சார்பாக கலந்துகொண்டு எதிராளிகளை வார்த்தைகளில் தடுமாற வைப்பார், சரவெடியாக வெடித்து தள்ளிவிடுவார்.

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருக்கும் விஜய தரணிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது கணவர் சிவக்குமார் கென்னடி கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்தார். இவரது மகள் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனை கல்லூரியில் டாக்டர் படித்து வந்தார். 

இந்நிலையில், விஜய தரணியின் மகள் டாக்டர். அபிராமி கென்னடி - டாக்டர் தீபக் ராஜதுரை சென்னையில்  திருமண வரவேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அதேபோல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் விஜய தரணி MLA  வீட்டு  திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு அபிராமி கென்னடி - டாக்டர் தீபக் ராஜதுரை மணமக்களை வாழ்த்தினார்.