திமுக மூழ்கும் கப்பலாக மாறி வருகிறது. ஆகையால், 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க முடியாது என எச்.ராஜா கூறியுள்ளார்.

தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் தேர்தல் கூட்டணி, தேர்தல் களப்பணி உள்ளிட்டவைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் இருந்து மேலும் பல கட்சிகள் விலகி அதிமுகவில் இணையும் என அமைச்சர்கள் கூறிவருகின்றனர். அதேபோல், வரும் தேர்தலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகும். அதிமுக பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி அமையும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார். 

ஆனால், திடீரென பாஜக திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம் என பாஜக மூத்த தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று தெரிவித்தார். அதிமுக மீதான நம்பகத்தன்மை குறைந்ததாலும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை நிலவுவதாலும் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் என திமுக பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர். 

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  எச்.ராஜா;- திமுக மூழ்கும் கப்பலாக மாறி வருகிறது. 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க முடியாது என  கூறியுள்ளார். மேலும் திமுக கூட்டணியில் பாஜக இடம்பெறலாம் என்ற பொன். ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி பதில் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.