Asianet News TamilAsianet News Tamil

தோல்வி பயத்தில் வழிக்கு வந்த மு.க.ஸ்டாலின்... மு.க.அழகிரி ஆதரவாளர்களுக்கு திமுகவில் 40 சீட்..!

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் இணைக்க மு.க.ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 
 

MK Stalin who came to the path for fear of defeat ... 40 seats in DMK for MK Alagiri supporters
Author
Tamil Nadu, First Published Feb 13, 2021, 11:56 AM IST

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் இணைக்க மு.க.ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. MK Stalin who came to the path for fear of defeat ... 40 seats in DMK for MK Alagiri supporters

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், சசிகலா விடுதலை, ஜெயலலிதா நினைவிடம் திறப்பு என பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. முன்னதாக தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, கடந்த 2014ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாகவும், அவருக்கும் ஸ்டாலினுக்கும் இடையே சில மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு கட்சியில் இணைய முடியாமல் இருந்த அழகிரி, விரைவில் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் திமுகவில் அழகிரி கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை என மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துவந்தார். MK Stalin who came to the path for fear of defeat ... 40 seats in DMK for MK Alagiri supporters

இந்நிலையில், மு.க.அழகிரி திடீரென சென்னை கிளம்பி வந்தார். பெங்களூருவில் இருந்த செல்வி, அழகிரி வருகையை அடுத்து திடீரென சென்னைக்கு வந்தார். அழகிரியை சமாதானப்படுத்தவும், கட்சியில் சேர்ப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளன. அப்போது மு.க.அழகிரி ஆதரவாளர்கள் 40 பேருக்கு சீட் கொடுக்க மு.க.ஸ்டாலின் சம்மதித்துள்ளதாகவும், அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையில் செல்வி மூலம் பணப்பட்டுவாடா, பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios