மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவுக்குப் எதிராக நடத்திய மாபெரும் பேரணியில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால், தேசிய அளவில் திமுகவுக்கு முக்கியத்துவம் குறைகிறது என அரசியல் விமர்சகர்கள் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

கொல்கத்தாவில் நடந்த இந்தப்பேரணி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்றது. இந்த பேரணியின் பெங்காலியில் தனது உரையை ஆரம்பித்தார் மு.க.ஸ்டாலின். 25 எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் தான், நேற்றே தனி விமானம் மூலம் தனது பி.ஆர்.ஓ சுனில், மருமகன் சபரீசன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோருடன் கொல்கத்தா சென்றார் ஸ்டாலின்.

 
நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கனிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றதால், தற்போது பாஜக எதிர்கட்சிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திரா, கர்நாடகம், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களை குறிவைத்து முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும் வெற்றியை பெற்றுத் தரும் என்பதால் தேசிய கட்சிகள் மு.க.ஸ்டாலினுக்கு பெரிதும் முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், கொலகத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வரிசையில் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டார் மு.க.ஸ்டாலின். இதனால், தேசிய முக்கியத்துவம் திமுகவுக்கு குறைகிறதா? என சந்தேகம் எழுந்துள்ளது. முதலிடத்தில் மம்தா பானர்ஜி, அடுத்து ஃபரூக் அப்துல்லா, மூன்றாவது இடத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, அடுத்து சந்திரபாபு நாயுடு ஆகியோர் இடம்பிடித்தனர். ஐந்தாவது  இடத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, அடுத்து அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் சதிஷ் மிஸ்ரா, அடுத்த இடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டது. இதனால், மனம் வெறுத்துப்போன திமுக சீனியர்கள், ’’கருணாநிதி இருந்திருந்தால் இரண்டாவது இடம் கொடுக்கப்பட்டிருக்கும்’ என நொந்து கொள்கின்றனர்.