ஜெயலலிதா வழியில் நடப்பதாக கூறும் முதல்வர், ஜெயலலிதாவை திட்டி தீர்த்த பாமக ராமதாசுடன் கூட்டணி வைத்துள்ளார். எப்படி ஜெயலலிதா வழியில் நடப்பார் என எடப்பாடி பழனிச்சாமியை எடக்கு முடக்கான கேள்வியால் மடக்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

திமுக கூட்டணி சார்பில் அரூரில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது, அங்கு பேசிய ஸ்டாலின்; கடந்த நான்கு நாட்களாக பிரசாரம் செய்து வருகிறேன். திமுக பிரசார கூட்டத்திற்கு வரும் மக்கள் கூட்டத்தில் கால்வாசி கூட்டம் கூட அதிமுக கூட்டத்திற்கு வருவதில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் பேசுகிறார். மக்கள் கூட்டம் இல்லாததால் காலியாக உள்ள ரோட்டில் உலா போகிறார் என பத்திரிகைகள் தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்து கொண்டுள்ளன. சேலத்தில் முதல்வர் பேசும் போது மறைந்த எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் அதிமுக கட்சியை தன்னிடம் ஒப்படைத்து விட்டு சென்றதாக கூறுகிறார்.

அவர்கள் இருவரையும் பற்றி பேச முதல்வருக்கு என்ன தகுதி இருக்கிறது. எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரையும் மறந்து விட்டு மோடி அமித்ஷாவை தெய்வமாக வணங்குகிறார். மார்வாடி கடையில் அடகு வைத்தால் கூட மீட்டு விடலாம். ஆனால் அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை முதல்வர் அடகு வைத்துள்ளார். அதை மீட்க முடியாது.

ஜெயலலிதா வழியில் நடப்பதாக கூறும் முதல்வர், ஜெயலலிதாவை திட்டி தீர்த்த பாமக ராமதாசுடன் கூட்டணி வைத்துள்ளார். எப்படி ஜெயலலிதா வழியில் நடப்பார்.

மக்கள் முகம் சுளிக்காத ஆட்சி நடப்பதாக ஆதாயத்திற்காக ராமதாஸ் புகழ்கிறார். அதிமுக கூட்டணியை பாமகவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. தர்மபுரியில் அன்புமணியை கட்டாயப்படுத்தி நிற்க வைத்துள்ளனர். பாமகவின் 10 அம்ச கோரிக்கையில் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை குறித்து இடம் பெறவில்லை. 

பஜ்ஜியை கூட ஓசியில் பிடுங்கி சாப்பிடுறாங்க, ஓசி தேங்காய், பத்தி கேட்டு மிரட்டுவதாக திமுகவை கிழி கிழி என கிழித்து தொங்கவிட்ட எடப்பாடி பழனிச்சாமியை பதிலுக்கு பதில் கலாய்த்துள்ளார்.

Content