முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக்குவதற்காக திமுகவின் உதவியை காங்கிரஸ் மேலிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

 

கடந்த 30 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக அசாமில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மன்மோகனின் பதவிக் காலம் அண்மையில் நிறைவு பெற்றது. காங்கிரசிற்கு போதிய பலம் இல்லாததால் அஸ்ஸாமில் இருந்து அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லை.

இருமுறை பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங்கிற்கு கூட்டணிக் கட்சியான திமுகவின் உதவியுடன் தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு அனுப்ப காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் திமுகவுக்கு மாநிலங்களவையில் மூன்று இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் மூன்று இடங்கள் அதிமுகவுக்கு சாதகமாக இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், திமுக இதற்கு உதவ ஒரு கோரிக்கை வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார் கன்னியாகுமரி எம்.பியாகி விட்டதால், அவரது நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி காலியாக இருக்கிறது. அந்தத் தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுக்க வெளிப்படையாகவே ஸ்டாலின் மகன் உதயநிதி காங்கிரஸ் கட்சிக்கு கோரிக்கையாக விடுத்தார். 

ஆகவே நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுத்தால் மன்மோகன் சிங்குக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பத்தை பற்றி யோசிக்கலாம் என மு.க.ஸ்டாலின் காங்கிரஸிடம் கறாராகக் கூறி விட்டாதாக தெரிவிக்கின்றனர் திமுக நிர்வாகிகள்.