’முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார் மு.க.ஸ்டாலின்’...
தலைப்பைப் படித்து கன்ஃபியூஸ் ஆவதற்கு முன்பு முன்னாள் முதல்வர் என்று சேர்த்துப்படித்தால் குழப்பம் தீர்ந்துவிடும்.
தலைப்பைப் படித்து கன்ஃபியூஸ் ஆவதற்கு முன்பு முன்னாள் முதல்வர் என்று சேர்த்துப்படித்தால் குழப்பம் தீர்ந்துவிடும்.
விஷயம் இதுதான்.
“கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பின் சில காலம் கோபாலபுரம் இல்லம் செய்திகளில் அடிபடாமல் இருந்தது. யார் கொடுத்த செண்டிமெண்ட் யோசனையோ அல்லது சொந்த சிந்தனையோ, கோபாலபுரம் இல்லத்துக்கு ரெகுலர் விஜயம் மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறார் ஸ்டாலின்.
நேற்றும் இன்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்துக்கு வருவதும், அங்கே பார்வையாளர்களை சந்திப்பதும் செய்திகளாக வருகிறது. இன்று பழக்க தோஷத்தில் அறிவாலயம் வந்த கருணாஸையே ரீடைரக்ட் பண்ணித்தான் கோபாலபுரம் அனுப்பிவைத்தார்களாம்.
மாடியில் இருக்கும் கலைஞரின் அறையை அவ்வப்போது சுத்தம் செய்து அப்படியே வைத்திருக்கிறார்கள். அதே போல வீட்டின் தரைத் தளத்தில்தான் ஒரு தனி நாற்காலி இரு பக்கமும் நீண்ட சோபாக்கள் போட்டு கலைஞர் மாதிரியே அவரது நாற்காலியில் அமர்ந்து பார்வையாளர்களை பார்க்கிறார் ஸ்டாலின்.
தனது செனடாப் இல்லத்திலும், அறிவாலயத்திலும் யாரை சந்தித்தாலும் தகவல்கள் மீடியாவுக்கு உடனுக்குடன் லீக் ஆகிவிடுகிறது என்பதால் மிக முக்கியமான அரசியல் சந்திப்புகளை இனி கோபாலபுரம் இல்லத்தில்தான் வைத்துக் கொள்ளவிருக்கிறாராம் திமுக தலைவர்”