சென்டிமெண்ட், ராசி நம்பர், சகுணம் பார்ப்பதில் அதிமுகவை மீறிவிட்டது திமுக. மு.க.ஸ்டாலின் அவரது அப்பா கருணாநிதி பாணியை கடைபிடித்து புதிய செண்டிமெண்டை ஏற்படுத்தி இருப்பதுதான் திமுகவில் தற்போதைய ஹாட் டாபிக். 
  
செஞ்சி திமுக எம்.எல்.ஏ மஸ்தான் இல்லத் திருமணவிழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்தத் திருமணவிழா தேர்தல் பிரச்சாரக் கூட்டமாகவும் நடைபெறுகிறது” என்று பிரகடனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா 10 லட்ச ரூபாயைத் தேர்தல் நிதியாக ஸ்டாலினிடம் வழங்கினார். 

கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரியில் செஞ்சியில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட கருணாநிதி, “இங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன்” என அறிவித்தார். அப்போது, மாவட்ட விவசாய அணியைச் சேர்ந்த கண்ணன், கருணாநிதியிடம் தேர்தல் நிதியாக ஒரு லட்ச ரூபாயை அளித்தார். அந்தத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தது. இதைச் சுட்டிக்காட்டும் செஞ்சி உடன்பிறப்புகள், “தலைவர் வழியில் இப்போது தளபதியும் செஞ்சியில் வைத்து தேர்தல் நிதியைப் பெற்றிருக்கிறார். நிச்சயம் திமுகவுக்கு வெற்றிமுகம்தான்” எனச் சிலாகிக்கிறார்கள்.