பாஜக ஆட்சிக்கு எதிராக மம்தா பானர்ஜி நடத்திய பொதுக்கூட்டத்தில் 25 எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்றிருந்தாலும் நிகழ்ச்சியின் அட்ராக்சன் மு.க.ஸ்டாலின் மீதே குவிந்திருந்தது. காரணம், அவர் பெங்காலி பேசியதோடு மற்றவர்களை விட மோடியின் செயல்பாடுகளை காரசாரமாக விமர்சித்தார். 

பாஜகவுக்கு எதிராக நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள நேற்றே தனி விமானம் மூலம் கொல்கத்தா சென்றடைந்தார் மு.க.ஸ்டாலின். அவரது பி.ஆர்.ஓ சுனில், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மருமகன் சபரீசன் ஆகியோரும் உடன் சென்றனர். விடுதியில் தங்கியிருந்த எதிர்கட்சி தலைவர்களை நேற்று அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வரவேற்றதோடு முக்கியமானவர்களுடன் வெகுநேரம் மனம் விட்டு பேசியிருக்கிறார் மம்தா பானர்ஜி. அதிக நேரம் மு.க.ஸ்டாலினுடன் மக்களவை தேர்தல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
   
இந்நிலையில், கொல்கத்தா மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின் தேசிய கட்சி தலைவர்களையே அர்சரடித்து விட்டார். மு.க.ஸ்டாலின் உரையை மொழிபெயர்ப்பு செய்வது இதுதான் முதல்முறை. அதேபோல் ஸ்டாலின் வேறு மொழியில் மேடையில் பேசியதும் முதல் முறை. விழாவில் பங்கேற்ற மற்ற தலைவர்கள் அனைவரும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசினர். ஸ்டாலின் பேச்சு மட்டுமே மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. கொல்கத்தாவில் பெங்காலியில் பேசப்போவதை கடந்த ஒருவார காலமாகவே வீட்டில் மருமகன் சபரீசன், மகள் செந்தாமரை, மனைவி துர்கா ஆகியோரிடம் அடிக்கடி படித்து காண்பித்தாராம். 

மு.க.ஸ்டாலின் பெங்காலியில் ஆற்றிய உரையில், ’ பாங்காளேர் பாகி தேர்! தமிழ்நாடூர் ஸ்டாலினேர், ப்ரேம் போரா நமோஷ்கார். ஹஜார் மிலேர் தூர் திகே, ஆப்னார்கே தேக்தே ஏஷ்ச்சி. தூரே த்தேக்கேஓ, ஆம்ரா ஆக்தை, மூல் ஷூதே, ஷாமில் ஹோயே ஆச்சி. கொல்கத்தா- திண்டுகலேர் ஜாதிய ராஸ்தா, அமதேர் தேஷ் ஏவோம் மோனேர், ஷொயுக்தோ கோர்ச்சே..பாரதேர் துதியோ, சாதினோதா ஜூத்தே, ஷாமில் ஹோதே பாங்காளேர். ஒக்னி கோன்யா, சஹோஜ் மானுஷ் ஏவோம் அமர் போன், சொந்த்யோ மமதா பேனர்ஜி தீதீ, ஆகமோனே ஆமி ஷாமில் ஹோயேச்சி..’’ என அவர் பேசியதைக் கேட்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர். 

அவர் பெங்காலியில் பேசிய தமிழ் மொழி பெயர்ப்பு இதுதான். ’’வங்கத்துப் புலிகளே!  உங்களுக்கு தமிழ்நாட்டு ஸ்டாலினின் அன்பு வணக்கங்கள்! பல நூறு மைல்கள் தாண்டி உங்களைக் காண வந்திருக்கிறேன். தூரமாக நாம் இருந்தாலும் ஒரே நேர்கோட்டில் தான் இருக்கிறோம். கொல்கத்தா - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நம்மை இணைத்திருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்காக வங்கத்து சகோதரி, இரும்புப் பெண்மணி, எளிமையான மனிதர் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று நான் வந்திருக்கிறேன்’’ என அவர் பேசியதை மம்தா பானர்ஜி நெகிழ்ச்சியுடன் கேட்டு ரசித்தார்.. இனி வரும் காலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்லும்போது அந்தந்த மாநில மொழிகளில் உரையை ஆரம்பிப்பக்கவும் திட்டமிட்டு இருக்கிறாராம் மு.க.ஸ்டாலின்.