Asianet News TamilAsianet News Tamil

12 மணிக்கு காங்கிரசுக்கு சுப முகூர்த்தமா.. எமகண்டமா..? அறிவாலயத்திற்கு அலையாய் அலையும் தலைவர்கள்..!

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று மாலை திடீரென கே.எஸ்.அழகிரி – கே.ராமசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கை தான் கடந்த ஒரு வார காலமாக தமிழக அரசியலையே புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது. அதில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தர்மத்தை திமுக கடைப்பிடிக்கவில்லை என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து திமுக தலைமையை சமாதானப்படுத்தும் வகையில் மீண்டும் கே.எஸ்.அழகிரி ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஆனால், திமுக தலைமையை சமாதனப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்தது. 

mk stalin ks alagiri today meet
Author
Tamil Nadu, First Published Jan 18, 2020, 11:46 AM IST

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசலை சரிசெய்ய கே.எஸ்.அழகிரி சந்திக்க உள்ள நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திடீரென மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று மாலை திடீரென கே.எஸ்.அழகிரி – கே.ராமசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கை தான் கடந்த ஒரு வார காலமாக தமிழக அரசியலையே புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது. அதில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தர்மத்தை திமுக கடைப்பிடிக்கவில்லை என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து திமுக தலைமையை சமாதானப்படுத்தும் வகையில் மீண்டும் கே.எஸ்.அழகிரி ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஆனால், திமுக தலைமையை சமாதனப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்தது. 

mk stalin ks alagiri today meet

இதையும் படிங்க;-  காங்கிரஸ் தயவில் ராஜ்யசபா எம்.பி. ஆனாரா கனிமொழி? மாணிக்கம் தாக்கூர் வெளியிட்ட தகவலின் பின்னணி..!

இதனையடுத்து, பாஜகவின் தேசிய குடியுரிமை சட்டத்துக்கும், குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கும் எதிராக சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக புறக்கணித்தது. இதற்கிடையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் எங்களுக்கு என்ன நஷ்டம்? அவர்களுக்கு ஓட்டே இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் இந்த ஞானம் ஏன் வரவில்லை? என கேள்வியெழுப்பினார். இதனால், இரு கட்சிகளுக்கு இடையே வார்த்தை போர் உச்சத்தை எட்டியது. 

mk stalin ks alagiri today meet

இந்நிலையில், திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணி முறியும் அளவிற்கு சென்றுக்கொண்டிருந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 12 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திக்கிறார். இந்த சந்திப்பிற்கு கே.எஸ்.அழகிரியுடன் கே.வீ.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோரும் செல்கின்றனர். 

mk stalin ks alagiri today meet

இதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசியுள்ளார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. கூட்டணிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அவை அனைத்தும் பேசி சரி செய்து கொள்வோம் என்று கூறினார். ஆனால், இந்த சந்திப்பு முழுக்க முழுக்க ஸ்டாலினை சமாதனம் செய்யும் சந்திப்பாகவே கருதப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios