மயிலாடுதுறையில் உள்ள உணவகத்தில் ஊத்தப்பம் கேட்டு தகறாரில் ஈடுபட்ட திமுக ஊராட்சிமன்றத் துணை தலைவர் மகன் உட்பட 6 இளைஞர்கள், ஓட்டல் ஊழியர்களை தாக்கி கத்தியால் குத்த முயற்சித்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

தி.மு.க உடன்பிப்புகளின் ரவுடியிச அட்டகாசம் ஆட்சியில் இல்லை என்றாலும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. பியூட்டி பார்லர் பெண்ணை அடித்தது, பிரியாணி தராத கடைகாரரை பாக்ஸிங் செய்து மூஞ்சியில் குத்தியது, இரவில் பைக்கில் வந்து கடை வாசலில் வைத்திருந்த கடப்பா கல்லை திருடி சென்றது, கந்துவட்டி கேட்டு மிரட்டியது, பெண்ணை கற்பழித்தது, நிலத்தை பிடிங்கியது என நாளுக்கு நாள் உடன்பிறப்புகளின் அட்டகாசம் அதிகரித்துகொண்டே செல்கிறது. இதனை புத்தகமாக அச்சிட்டால் "நெஞ்சுக்கு நீதி" புத்தகத்தை விட அதிக பக்கங்கள் வரும் அளவிற்கு இவர்களின் ரவுடிசம் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த வரிசையில் உணவகத்தில் ஊத்தாப்பம் கேட்டு ஊழியரை கத்தியால் குத்த சென்ற தி.மு.க உடன்பிறப்பின் சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

 

மயிலாடுதுறையில் பிரபலமான ஹோட்டல் ஒன்றில், மயிலாடுதுறை திமுக ஊராட்சி செயலாளர் ஜெயராஜ் என்பவரின் மகன் 6 பேருடன் உணவகத்தில் சாப்பிட சென்றுள்ளார்.மது போதையில் இருந்த அவரும் அவரின் கூட்டாளிகளும் ஊத்தாப்பம் வேண்டும் என கேட்டுள்ளனர். ஊழியர் இல்லை என கூறவே, எனக்கே ஊத்தாப்பம் இல்லையா என உணவகத்தை அடித்து நொறுக்கியதுடன் கத்தியை கொண்டு குத்தவும் பாய்ந்துள்ளனர். இது கடையில் இருந்த சி.சி.டி.வி'யில் காட்சிகளாக பதிவாகியுள்ளன. ஊத்தாப்பம் கிடைக்கவில்லை என்று கடை ஊழியரை கத்தியால் குத்தி கடையில் அராஜகம் செய்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உடன்பிறப்புகள் சென்று பிரச்சினை செய்வதும் பின்னாலேயை கட்சி தலைவர் ஸ்டாலின் சென்று சமாதானம் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. மயிலாடுதுறைக்கும் ஸ்டாலின் வருவார் என உடன்பிறப்புகள் இப்பொழுதே கிசுகிசுக்க துவங்கி விட்டனர். இந்நிலையில், #ஓசி_ஊத்தப்ப_திமுக என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.