Asianet News TamilAsianet News Tamil

மு.க.ஸ்டாலின் - தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் குட்கா உரிமை நோட்டீஸ்... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

MK Stalin - DMK MLAs Gutka rights notice ... Court verdict sensational ..!
Author
Tamil Nadu, First Published Aug 25, 2020, 11:29 AM IST

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

சட்டசபைக்குள் 'குட்கா' எடுத்து சென்ற விவகாரத்தில், உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. MK Stalin - DMK MLAs Gutka rights notice ... Court verdict sensational ..!

தமிழகத்தில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் எளிதில் கிடைப்பதாக, தி.மு.க., குற்றம்சாட்டியது. அதை நிரூபிக்கும் விதமாக, சட்டசபைக்குள் குட்காவை, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எடுத்து சென்றனர். இதையடுத்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டது. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 21 பேரிடம் விளக்கம் கோரி, சட்டசபை உரிமைக் குழு, 'நோட்டீஸ்' அனுப்பியது.MK Stalin - DMK MLAs Gutka rights notice ... Court verdict sensational ..!

நோட்டீசை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் உள்ளிட்ட, 21 பேரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' வழக்கை விசாரித்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தது. இந்நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்தனர். திமுக எம்.எல்.ஏ.,க்கள் மீது புதிதாக உரிமை மீறல் மனு கொடுக்கலாம். உரிமை மீறல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவும் உத்தரவிட்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios