தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பல கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராவதற்கான ஆயத்தப் பணிகளில் தற்போதே ஈடுபடத் தொடங்கிவிட்டன. 

திமுக சார்பில் தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆகியவற்றுக்கு தனித்தனியாகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஊராட்சி சபைக் கூட்டங்கள் மூலம் முதற்கட்டப் பிரச்சாரத்தையும் தற்போதே தொடங்கிவிட்டனர்.  இதற்கு முன்னதாக 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் உட்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.  தற்போது தயாரிக்கப்படும் அறிக்கை பல்துறை வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ஆலோசனைகள் பெறப்பட்டு தயாரிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில்,  திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். குழுவில் இடம்பெற்றுள்ள திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் பேராசிரியர் ராமசாமி ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

1 மணி நேரம் வரை நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள், திட்டங்கள், வாக்குறுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குழுவினருக்கு ஸ்டாலின் சில அறிவுரைகளையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் தமிழ் ராக்கர்ஸிலும் படம் மரண ஃப்ளாப்பை சந்தித்துள்ளதாம், ஆமாம், சமீபத்தில் வெளியான புதிய திரைப்படங்களில் இந்த படம் தான் குறைந்த அளவு தமிழ் ராக்கர்ஸில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் தமிழ் ராக்கர்ஸில் கூட இந்த படத்தை பார்க்க ஆளில்லை என்ற பரிதாப நிலையே சிம்பு படத்திற்கு ஏற்பட்டுள்ளது தெரிகிறது.