Asianet News TamilAsianet News Tamil

அதிமுக கட்சி பெயரை விமர்சித்த மு.க.ஸ்டாலின்... திமுகவுக்கு புனைப்பெயர் சூட்டிய பாஜக..!

இப்படிப்பட்ட ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு அதிமுகவும் துணை போயிருப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, அதிமுகவைப் பொறுத்தவரையில், அதிமுக என்ற பெயரை மாற்றி அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டால்தான் அது பொருத்தமாக இருக்கும்.

MK Stalin criticizes AIADMK name... BJP retaliated
Author
Tamil Nadu, First Published Aug 6, 2019, 2:30 PM IST

அதிமுக என்ற பெயரை மாற்றி அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டால்தான் அது பொருத்தமாக இருக்கும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த அவர் ஜம்மு காஷ்மீர் மக்களுடைய ஒப்புதலை பெறாமல் சட்டப்பிரிவு 370-ஐ பயன்படுத்தி ஒரு ஜனநாயகப் படுகொலையை இன்றைக்கு அரங்கேற்றி இருக்கிறார்கள். மாநில அந்தஸ்தில் இருந்து லடாக், ஜம்மு காஷ்மீர் என யூனியன் பிரதேசங்களாக  பிரிப்பது என்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. MK Stalin criticizes AIADMK name... BJP retaliated

இது ஜனநாயகத்திற்கு விரோதமாக அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு அதிமுகவும் துணை போயிருப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, அதிமுகவைப் பொறுத்தவரையில், அதிமுக என்ற பெயரை மாற்றி அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டால்தான் அது பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தாலும் பாஜக தான் இந்த ஆட்சியை இயக்குகிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் மீண்டும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.MK Stalin criticizes AIADMK name... BJP retaliated

இதற்கு தமிழக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து விமர்சித்துள்ளது. கச்சத்தீவைக் காங்கிரஸ் தாரைவார்த்த பொழுது, நேருவின் மகளே வருக எனவும், இலங்கைப் படுகொலையின் பின் இந்திராவின் மருமகளே வருக என்றும் ஆரத்தி எடுத்த திமுக தலைவர் திமுகவின் பெயரை, அகில இந்தியத் திராவிட முன்னேற்ற காங்கிரஸ் என்று மாற்றியதும் சொல்லுங்கள், பரிந்துரைப்போம் என்று விமர்சித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios