பாஜக இருக்கும் வரை தமிழகத்தில் ஒருபோதும் மு.க.ஸ்டாலின் முதல்வராக விடமாட்டோம் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் மீண்டும் கூறியுள்ளார். 

கிருஷ்ணகிரியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் சந்தன கடத்தல் வீரப்பனின் 2-வது மகள் வித்தியா இன்று திடீரென பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முரளிதரராவ்;- பாஜக இருக்கும் வரை தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது. மு.க.ஸ்டாலின் அதிகம் பொய் பேசுகிறார். நமது தேசத்திற்கு எதிராகவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் காரனுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார். மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு அதிர்ஷ்டம் இல்லாதவர். 

இதையும் படிங்க;- தன்னைவிட 15 வயது முதிய பெண்ணுடன் கள்ளத்தொடர்பு... திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார்..!

மேலும், சிஏஏவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகத் தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு  முரளிததராவ் சவால் விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் கைப்பாவை ஈபிஎஸ் என்கிறார் ஸ்டாலின். பிரதமரை கையில் வைத்துக்கொள்வதில் தவறு இல்லை என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.