கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்து கொண்டு கணவர் கும்மாளம் அடிக்கும் கணவர் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் புகார் கூறியதால், கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என திமுக நிர்வாகியின் மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

சென்னை அடையார் பகுதியை சேர்ந்த ரம்யாவுக்கும் வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதிகுமாருக்கும் கடந்த 2016-ம் பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், என்னை திருமணம் செய்வதற்கு முன் சாரதிகுமார் சேலத்தில் சட்ட கல்லுாரியில் சேர்ந்துள்ளார். அப்போது, அவரை விட 15 வயது மூத்த பெண் சத்யபிரியா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மேலும், மனைவிக்கு திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுத்த நகையை அபகரித்து கள்ளக் காதலியிடம் கொடுத்தார். 

தான் மகப்பேறு காலத்தில் தான் தாய் வீட்டிற்கு சென்றிருந்தபோது அந்த பெண்ணை வீட்டிற்கே அழைத்து வந்துள்ளதாக கணவர் மீது ரம்யா குற்றம்சாட்டினார். இது குறித்து திமுக தலைமையிடம் புகார் அளித்ததாகவும், இதனால் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். மேலும், தனது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். 

மேலும், என் கணவருக்கு, சத்யபிரியா மட்டுமின்றி, வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருப்பதால், காஞ்சிபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டேன். நடவடிக்கை உயிருக்கு பயந்து தற்போது சென்னை அடையாறில் உறவினர் வீட்டில் தங்கி உள்ளேன். இதையடுத்து, என் கணவர், தாலியை கழற்றி கொடுக்குமாறு, கழுத்தில் கத்தியை வைத்து, கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதிகுமாரிடம் கேட்டபோது, தனக்கும் தனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரிய வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், வழக்கு முடியும் தருவாயில் இருப்பதால், அதிக பணம் பெறுவதற்காகவே இந்த குற்றச்சாட்டை கூறி வருவதாக தெரிவித்தார்.