அழகிரி பனியன் போட்டு செல்பி எடுத்த நபர்..!! அதிர்ந்து போன மு.க.ஸ்டாலின்..!
மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து சாலையில் நடந்து சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது மு.க.அழகிரியின் படம் பொறிக்கப்பட்ட டிசர்ட் அணிந்திருந்த இளைஞர் ஒருவர் ஆர்வமாக ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து சாலையில் நடந்து சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது மு.க.அழகிரியின் படம் பொறிக்கப்பட்ட டிசர்ட் அணிந்திருந்த இளைஞர் ஒருவர் ஆர்வமாக ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடந்த 19-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று 26-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. அதேபோல் வேட்பு மனு மீதான பரிசீலினை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. இதனால் அரசியல் தலைவர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து நேற்று பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு மதுரை மாட்டுத்தாவணி அருகே தனியார் விடுதியில் மு.க.ஸ்டாலின் தங்கினார். இன்று காலை மு.க.ஸ்டாலின் தோழமை கட்சி நிர்வாகிகளும் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது மு.க.அழகிரி திறந்து வைத்த மார்க்கெட்க்கு வந்திருந்த மக்களை சந்தித்து சு.வெங்கடேசனுக்கு ஆதரவு திரட்டிய அவர், வணிகர்கள், மக்களிடம் கலந்துரையாடினார். அங்கிருந்த கடை ஒன்றில், வேட்பாளருடன் சேர்ந்து ஸ்டாலின் டீ குடித்தார்.
பின்னர் மு.க.ஸ்டாலினை நேரில் பார்த்த இளைஞர்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அதில் ஒரு இளைஞர் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் பரவி வருகிறது. மு.க.அழகிரியின் படம் பொறிக்கப்பட்ட டிசர்ட் அணிந்திருந்த அந்த இளைஞர் ஆர்வமாக ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.