மு.க.ஸ்டாலின் - அழகிரி இடையேயான சமரசப் பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, துரை தயாநிதிக்கு பதவி தர முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் - அழகிரி இடையேயான சமரசப் பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, துரை தயாநிதிக்கு பதவி தர முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.
மதுரையில் வசிக்கும் முன்னாள் மத்திய அமைச்சரும், தென்மண்டல அமைப்புச்செயலாள்ருமான மு.க.அழகிரி கட்சியில் இருந்து கருணாநிதி காலத்திலேயே கட்டம் கட்டப்பட்டு விட்டார். மீண்டும் கட்சியில் இணைய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். மாற்று கட்சியில் இணைய உள்ளதகாவும், கலைஞர் திமுக என்கிற கட்சியை ஆரம்பிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தனக்கு கட்சியில் பொறுப்பு வேண்டாம் தனது மகன் துரை தயாநிதிக்கு கொடுத்தால் போதும் என அழகிரி அவரது குடும்ப உறுப்பினர்கள் மூலம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தி.மு.க., மேலிடம், குடும்ப உறுப்பினர்கள் சிலர் மூலமாக சமரசப் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது. அதில், அழகிரியின் வாரிசான துரை தயாநிதிக்கு தி.மு.க., மாணவர் அணிச் செயலர் பதவி வழங்க, முடிவு செய்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மாணவரணி செயலர் பதவியில் இருக்கிற எழிலரசன் எம்.எல்.ஏ.,வுக்கும், படப்பை ஒன்றியச் செயலாளர் மனோகரனுக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைப் பிரித்து, மாவட்ட பொறுப்பாளர் பதவியை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவாலய வட்டாரத்தில் பேச்சு பலமாக அடிபடுகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 27, 2020, 5:18 PM IST