வெற்றி பெற்ற பிறகு, தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் யார்? எந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் ? என்பதை கண்டறிந்து, வாக்காளர்களை பழி வாங்கி விட கூடாது என்பதை சிந்தித்து, வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகளை மொத்தமாக கொட்டி, அதை எண்ண வேண்டும் என உத்தரவிட்டு, அதை நடைமுறைப்படுத்தினார். இது அவரது மனித நேயத்துடன் கூடிய நிர்வாக சீர்த்திருத்தங்களில் முக்கியமாகதாகும்.
முன்னாள் தேர்தல் ஆணையராக செயல்பட்ட டி.என் சேஷன் அவர்கள் இன்று சென்னையில் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.இந்திய தேர்தல் ஆணையத்தின் 10 வது தலைவராக நியமிக்கப்பட்டதும், அதன் சுதந்திரம், தனித்தன்மை ஆகியவைகளை நிலைநாட்டினார். அவர் தான் தேர்தல் ஆணையத்திற்கு உயிரூட்டியவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தேர்தலில் சாதி, மத வெறியை தூண்டும் பிரச்சாரங்களுக்கு முதன் முதலில் தடை விதித்தது அவர்தான்.
பல்வேறு தேர்தல் சீர்த்திருத்தங்களை துணிச்சலாக அமல்படுத்தினார். தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் பறக்கும் படை என பல புதிய முயற்சிகளை எடுத்தது, வாக்காளர் அடையாள அட்டை முறையை கொண்டு வந்தது ஆகியன அவரது புகழை போற்றும். பழைய வாக்குச் சீட்டு முறையின் போது, எந்த பகுதியில் யாருக்கு ,எவ்வளவு ஒட்டு விழுந்தது என்பதை அறியும் முறை பல பழிவாங்கும் போக்குகளுக்கு காரணமாக இருந்தது. அதை அவர் தான் மாற்றியமைத்தார்.
இதன் மூலம் வேட்பாளர்கள், வெற்றி பெற்ற பிறகு, தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் யார்? எந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் ? என்பதை கண்டறிந்து, வாக்காளர்களை பழி வாங்கி விட கூடாது என்பதை சிந்தித்து, வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகளை மொத்தமாக கொட்டி, அதை எண்ண வேண்டும் என உத்தரவிட்டு, அதை நடைமுறைப்படுத்தினார். இது அவரது மனித நேயத்துடன் கூடிய நிர்வாக சீர்த்திருத்தங்களில் முக்கியமாகதாகும். இப்போதும் இந்த நிர்வாக முறைதான் நாட்டுக்கு தேவை என, அவர் மறைவை நினைக்கும் போது தோன்றுகிறது.
அவர் பல துறைகளில் பணியாற்றி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தாலும், சமரச மற்ற - ஆளுமை மிகு அரசு பணியாளர் என்ற பெயரை மக்களிடம் பெற்றவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவரை எதிர்த்தவர்கள் கூட, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என சட்டமன்ற உறுப்பினர் அன்சாரி தெரிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 11, 2019, 3:54 PM IST