கந்துவட்டி சர்ச்சையில் சிக்கியிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அதிலிருந்து தப்பிக்க மக்களை திசை திருப்பும் வகையில் பேசி வருகிறார் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி குற்றம்சாட்டியுள்ளார்.  சிஏஏ மற்றும்  என்ஆர்சி குறித்து ரஜனி கருத்து தெரிவித்துள்ள நிலையில் அன்சாரி இவ்வாறு விமர்சித்துள்ளார்.  தெரியாத விஷயத்தைப் பற்றி பேசாமல் இருப்பதே நடிகர் ரஜினிகாந்துக்கு மரியாதையாக இருக்கும் என்றும் அன்சாரி ரஜினிகாந்தை சாடியுள்ளார். ரஜனி என்றாலே சர்ச்சை, சர்ச்சைக்காகவே ரஜினி என்ற நிலைக்கு ரஜினி மாறியுள்ளார்.   ஏற்கனவே பெரியார் சர்ச்சையில் சிக்கி அதிலிருந்து  மீள முடியாமல் படாத பாடுபட்ட நடிகர் ரஜினிகாந்த் , தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் . 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள் மீது  நாடு முழுவதும் அதிருப்தி நிலவி வருகிறது ,  அதை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது.   இந்நிலையில் வழக்கம் போல தனது போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ,  சிஏஏ ,  என்ஆர்சி ,  என்பிஆர்  ஆகியவற்றை எதிர்த்து மாணவர்கள் நடத்தும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்தார் ,   அதாவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது அவசியம் எனவும்,    அப்படி கணக்கெடுப்பை நடத்தினால் யார் யார் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியும் என கூறி எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்துள்ளார் ரஜனி, அதுமட்டும் இல்லாமல் போராட்டம் நடத்துபவர்கள் யாருடைய கட்டுப்பாட்டிலோ இருக்கிறார்கள் என கூறி அதிர்ச்சி கிளப்பியுள்ளார். வழக்கம்போல அவரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .

 

இந்நிலையில்  நடிகர் ரஜினியின் கருத்துக் தொலைக்காட்சி வாயிலாக பதிலடி கொடுத்துள்ள  தமிழ்முன் அன்சாரி ,  " கந்துவட்டி சர்ச்சை குற்றச்சாட்டில் இருந்து தன்னை எப்படியாவது காத்துக்கொள்ள வேண்டும் என்பதாலும்,   மத்திய பாஜகவை திருப்திப்படுத்தவும் ரஜினி இப்படி பேசி வருகிறார்.  நடிகர் ரஜினிகாந்துக்கு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ,  இந்திய குடியுரிமை  சட்டம் ,  தேசிய குடிமக்கள் பதிவேடு , ஆகியவை குறித்து அடிப்படை ஞானமில்லை . இச் சட்டங்கள் மூலம் மத பாகுபாடு காட்டப்படுகிறது என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு , இச்சட்டம் மூலம்  ஈழத்தமிழர்களை புறக்கணிக்கிறார்கள் என்பதுதான் அடுத்த குற்றச்சாட்டு .  இச்சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுமே பாதிக்கப்படுகிறார்கள்.  

 

இச்சட்டத்தில் நடைமுறைக்கு ஒவ்வாத ஆதாரங்களை மத்திய அரசு கேட்கிறது,   பாட்டன் பூட்டன் இருப்பிடம் ,  ஆதாரம் ,   விலாசத்தை மத்திய அரசு கேட்கிறது .  நடிகர்  ரஜினியிடம் அவரது பாட்டன் பூட்டன் ஆதாரத்தை கேட்டால் அவரால் காட்ட முடியுமா.??   என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.  ரஜினியை அடிப்படை விஷயங்கள் கூட தெரியாமல் பேசி வருகிறார் ,  மாணவர்களும் மக்களும் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாருடைய கட்டுப்பாட்டிலோ இருப்பதாக ரஜினி சொல்கிறார்.  யார் சொன்னாலும்  மக்கள் ஏற்கமாட்டார்கள் என்ற யதார்த்த நிலையை முதலில் ரஜினி தெரிந்துகொள்ள வேண்டும் என  நடிகர் ரஜினிகாந்துக்கு மஜக பொதுச்செயலாளர் அன்சாரிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.