Asianet News TamilAsianet News Tamil

பக்ரீத் அதுவும் முதல்வருக்கு அன்சாரி வைத்த கோரிக்கை.. ஆயுள்தண்டனை கைதிகளை விடுதலை செய்யுங்க.

இத்திரு நாளையொட்டி தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோளையும் முன்  வைத்த அவர், எதிர்வரும் அண்ணா பிறந்த நாளையொட்டி, 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டணை கைதிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்  என்றார்.

MJK  Ansari  demand to chief minister in ramzan festival day.. Release the life prisoner thouse who have Completed 10 year.
Author
Chennai, First Published Jul 21, 2021, 2:15 PM IST

எதிர்வரும் அண்ணா பிறந்த நாளையொட்டி சிறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஒவ்வொரு ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்யவேண்டும் என மஜக பொதுச்செயலாளர் முதமிமுன் அன்சாரி தமிழக முதல்வருக்கு வேண்டுகொள் விடுத்துள்ளார். 

உலகம் முழுவதும் தியாக திருநாளான இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை மாவட்டம் தோப்புத்துறையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தொழுகையில் ஈடுபட்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது, கடந்த இரண்டு ரமலான் பண்டிகைகளையும், ஒரு பக்ரீத் பண்டிகையையும் கொரணா காரணமாக கொண்டாட முடியவில்லை, இவ்வாண்டு தொற்று குறைந்துள்ளதால் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியோடு மக்கள் தொழுகை நடத்தி பிரார்த்தனை செய்தனர். 

MJK  Ansari  demand to chief minister in ramzan festival day.. Release the life prisoner thouse who have Completed 10 year.

பக்ரீத் வாழ்த்து அறிக்கைகள் விடுத்த தலைவர்கள், சமூக வலைதளங்கள் வழியாக வாழ்த்து கூறிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்று ஒழிந்து உலகம் மீண்டு வரவும், மக்கள் மகிழ்ச்சியான இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதும் முக்கிய பிரார்த்தனையாக இருந்தது என கூறினார். மேலும், இத்திரு நாளையொட்டி தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோளையும் முன்  வைத்த அவர், எதிர்வரும் அண்ணா பிறந்த நாளையொட்டி, 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டணை கைதிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்  என்றார்.

MJK  Ansari  demand to chief minister in ramzan festival day.. Release the life prisoner thouse who have Completed 10 year.

அதில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் மற்றும் 60 வயதை கடந்த  கைதிகளுக்கும், நோயாளிகளாக சிறையில் வாடும் கைதிகளுக்கும் அவர்களுக்கு முன் விடுதலை கிடைக்கும் வரை வீடுகளிலேயே தங்கியிருக்க பரோல் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மேலும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தியதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது என்றும், இதற்காக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை பாராட்டுவதாக கூறினார்.   

 

Follow Us:
Download App:
  • android
  • ios