40 சட்டசபை தொகுதிகள் கொண்ட மிசோரமில், கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இங்கு கடந்த நவம்பர் மாதம் 28  ஆம் தேதி  சட்டசபை தேர்தல் நடந்தது. ஆளும் காங்கிரசுக்கும், மிஜோ தேசிய முன்னணிக்கும் போட்டி ஏற்பட்டது. இதில், காங்கிரஸ் 8, தொகுதிகளிலும், எம்என்எப்.,26 தொகுதிகளிலும், பா.ஜ., கூட்டணி 2 தொகுதிகளிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

மிசோரமில் ஆட்சிமைக்க 21 தொகுதிகள் தேவை. அப்படியிருக்க மிசோ தேசிய முன்னணி கட்சி 27 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 8  இடங்களிலும் பாஜக 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

எனவே இங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மிசோ தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.