முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 29ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்ககணக்கானோர் சென்னை மெரினாக கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, புதிய தலைமையின் கீழ் ஒற்றுமையாக செயல்படுவோம் என உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் சென்று, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
