ministers meeting
தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சசிகலா குடும்பத்தை அதிகவை விட்டு முழுமையாக நீக்கிவிட்டு ஆட்சியை காப்பாற்ற அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சசர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து அதிமுகவில் உள்ள இரு ., அணிகளை இணைப்பதற்கான பேச்சும் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே சசிகலாவையும்,தினகரனையும் ஒதுக்கி விட்டு இரு தரப்பும் இணைவதற்கு, ஓபிஎஸ் பச்சைக்கொடி காட்டியிருந்தார். அதற்கு, சசிகலா அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் வரவேற்பு தெரிவித்துள்ளார்..

அதிமுக அரசியலில் ஏற்பட்ட இந்த திடீர் முடிவால் சசிகலா மற்றும் தினகரனை, கட்சியில் இருந்து விலகிக் கொள்ளும்படி அமைச்சர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
அவர்கள் கட்சியில் இருந்து . விலகாவிட்டால், அவர்களை விலக்கி வைப்பது குறித்து, எடப்பாடி மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசித்து வந்தனர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார். கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தினரின் ஆதிக்கத்தின் கீழ் இருக்க கூடாது என்றும். தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் இருந்து முழுமையாக நீக்கவிட்டு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்
.
ஓபிஎஸ்சுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் நாங்கள் தயாராக உள்ளதாகவும், ஒற்றுமையாக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றும் இனி கட்சியிலும், ஆட்சியிலும் தினகரன், சசி ஆகியோரின் தலையீடு எள்ளளவும் இருக்கக் கூடாது என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜெயகுமார், தினகரன் குடும்பத்திற்கு இனி கட்சியில் இடம் இருக்காது என உறுதிபடத் தெரிவித்தார்.
தொண்டர்களின் விருப்பப்டி அதிமுக ஆட்சி அமையும் என்றும் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜெயகுமார், கட்சியை வழி நடத்த அமைச்சர்கள் அற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றும் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
அடுத்தடுத்து அதிமுக அரசியலில் ஏற்படும் இந்த திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
