தமிழகத்தில்   பரபரப்பான  அரசியல்   சூழல்  நிலவி வருகிறது.பிளவுபட்ட  அதிமுகவின்  இரு கட்சிகளும்  ஒன்றிணைய  வாய்ப்புகள்   அதிகமாக உள்ளது .

இன்று காலை ஓ பன்னீர் செல்வம்  பேச்சுவார்த்தைக்கு  தயார்   என குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ,  சசிகலா  தரப்பு அமைச்சர்களும்  பேச்சுவார்த்தைக்கு தயாராக   இருப்பதாக  தெரிவித்தனர்

இதனை  தொடர்ந்து  தற்போது   இருதரப்பு   அமைச்சர்களும்  திடீர்  ஆலோசனை மேற்கொண்டனர்

இந்த  ஆலோசனையில், முக்கிய  நிகழ்வாக  இரண்டு  காரணங்களை முன் வைத்து  விவாதம்   நடைபெற்றதாக  தெரிவித்தனர் .

1.கட்சியை  ஒற்றுமையாக   வழி நடத்துவது  குறித்து  பேச்சுவார்த்தை  நடைப் பெற்றதாக  அமைச்சர் ஜெயா குமார்    தெரிவித்தார்

 2இரட்டை இலை சின்னம் தொடர்பாக  தேர்தல் ஆணையத்தில்  சமர்பிக்கப்பட  வேண்டிய பிரமாண பத்திரம்  குறித்து விவாதித்ததாகவும் அமைச்சர்   ஜெயகுமார்  தெரிவித்தார்

மேலும்,பன்னீர்  செல்வம் அணியினருடன் ஆலோசனை நடத்த தயார்   என  அமைச்சர் ஜெயகுமார்  தெரிவித்தார்