ஆட்சி  மற்றும்  கழகத்தில்  இருந்து   தினகரன் குடும்பத்தை  நீக்க  அமைச்சர்கள்  ஒன்றாக   கூடி ஆலோசித்து  முடிவு எடுத்துள்ளதாக  அமைச்சர்   ஜெயகுமார்  தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா  மறைவிற்கு பின்,  தமிழக  அரசியலில்  ஒவ்வொரு நாளும்  ஒரு  புது புது மாற்றம்  வந்துக்கொண்டே இருக்கிறது அதாவது  அதிமுக  கட்சியானது  ஓபிஎஸ்   அணியாகவும், சசிகலா  அணியாகவும் பிரிந்தது.

பின்னர்   ஒவ்வொரு பிரச்சனையாக  ஆரம்பித்து , கட்சி சின்னம்  முடக்கப்பட்டது  வரை  ஒட்டுமொத்த மக்களும்  அறிவர். இந்நிலையில், தமிழக  அரசியலில்  ஒரு திருப்பு முனையாக , தினகரன் மற்றும்   சசிகலாவை  கட்சி மற்றும் கழகத்தில்  இருந்து   நீக்கிவிட்டு கட்சியை வழி நடத்த  புதியதாக  ஒரு  குழு அமைக்கப்படும் என   அமைச்சர்  ஜெயகுமார்  தெரிவித்துள்ளார் .

இந்நிலையில், புதியதாக  தினகரன்  அணி  உருவாகி உள்ளதால்  அதிமுக  கட்சியானது  தற்போது  மூன்று  அணிகளாக  உள்ளது  என்றே  கூறலாம் 

அமைச்சர்கள்  ஆலோசனை

அமைச்சர்கள் தங்கமணி ,ஜெயா குமார் , வேலுமணி, சிவி சண்முகம்   உள்ளிட்ட  அமைச்சர்கள்  நடத்திய  ஆலோசனையில் இந்த   முடிவு எடுக்கப்பட்டுள்ளது . அதாவது  ஒரே  குடும்பத்தின் பிடியில் ஒட்டு மொத்த அதிமுக  தொண்டர்கள்  சிக்கி  உள்ளதாக,  தொண்டர்களே   தங்கள் கருத்தை  கூறி  இருப்பதால், இந்நிலை மாற  வேண்டும்   என்பதற்காகவும்,  அதிமுக   சின்னத்தை மீண்டும் பெற வேண்டும்   என்பதற்காகவும்  அமைச்சர்கள்   ஒன்று   கூடி   இந்த  முடிவை  எடுத்துள்ளதாக   அமைச்சர்   ஜெயகுமார்   தெரிவித்தார்.

இந்நிலையில்,  ஓ பி எஸ்  அணியினருடன்  பேச்சுவார்த்தை  நடத்தி  சுமூக  தீர்வு  ஏற்பட  ஒத்துழைப்பு  வழங்க   உள்ளதாகவும்   ஜெயகுமார்  தெரிவித்துள்ளார் .

அதாவது  சசிகலா   குடும்பதினர்  எடுப்பது  தான்  முடிவு என்றிருந்த  நிலை மாறி, சசிகலா  மற்றும்   தினகரன்   குடும்பத்தையே  கட்சி மற்றும்   கழகத்திலிருந்து  நீக்க  அமைச்சர்கள் எடுத்த இந்த  முடிவு  பெரும்  பரபரப்பை  எற்படுதியுள்ளது.