மழைக்காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் ஆலோசனை கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜபாஸ்கர் தலைமையில் நடந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை ஒமந்தூரார் அரசினர் பல்நோக்கு அரசு மருத்துவ மனையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுகாதார துறை அதிகாரிகளுடன் தொற்று நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இதில் பேசிய ராதாகிருஷ்ணன் பதினேழு மாவட்டங்களில் கூட்டம் நடத்தி தொற்று குறைக்கப்பட்டது. திருவள்ளுவர் காவேரிபாக்கம் போன்ற இடங்களில் நேரிடையாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற இடங்களில் காய்சல் ஏற்பட்டால் கட்டுபடுத்தவும் மழைக்காலங்களில் கட்டுக்குள் வைத்திருப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. 

திருவள்ளூர் போன்ற இடங்களில் போலி மருத்துவர்களிடம் பொதுமக்கள் சென்று சிகிச்சை பெறும் பிரச்சனை உள்ளது. அதனை கட்டுப்படுத்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்றார். மேலும் டெங்கு மற்றும் இதர எந்த காய்ச்சலானாலும் 29 வகையான காய்ச்சலை கண்டறிய கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

 காய்ச்சல் போன்ற சம்பவங்களில் உயிரிழப்பு ஏற்படும் போது தேவையில்லாமல் மக்கள் மத்தியில் பீதி ஏற்படுத்த கூடாது. மக்களுக்கு என்ன காய்ச்சல் என்பதை தெளிவு படுத்த வேண்டும். அது நமது கடமை. கொள்ளை நோய் அல்ல மாறி மாறி டெங்கு, லெப்டோபயரஸ், மஞ்சள் காமாலை வருகிறது. இதனை அறிந்து காக்க வேண்டும். 

தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளது. கடந்த ஆண்டு தொற்றே இல்லாமல் மழையில் காத்தது போல கூட்டாக செயல்பட வேண்டும். மதுரவாயல் டி பி அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேபிள் டிவி மற்றும் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தவேண்டும்.

தண்ணீரால் ஏற்படும் நோயா, பைப்லைன் மூலம் வருகிறதா என்பதை ஆராய வேண்டும். இறப்புக்கு பிறகு அதிகாரிகள் வருகிறார்கள் என்பதை தவிர்க்க வேண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. பேருந்து நிலையம், மக்கள் கூடும் இடங்களை கண்காணிக்க வேண்டும். ஒரு இறப்பு கூட இருக்க கூடாது.

மூன்று சதவிகிதம் அளவுக்குத்தான் டெங்கு வந்துள்ளது . அந்த அளவுக்கு தடுக்கப்பட்டுள்ளது என்பது பாராட்டப்பட வேண்டியது. ஆனால் இறப்புக்கு நாம் இதை சொல்ல முடியாது. யாரையும் தரையில் போட்டு சிகிச்சை அளிக்க கூடாது. அரசு மருத்துவ மனைகளில் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர் தமிழகம் முழுவதும் அம்மாவின் ஆணைப்படி அரசு மருத்துவமனைகளில் தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து துறைகளிலும் மருத்துவர்கள் விழிப்புணர்வோடு உள்ளனர் என்று தெரிவித்தார்.