அமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற கார் விபத்து..! நாங்குநேரி அருகே நடந்த விபரீதம்..! 

தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் வழியில் நாங்குநேரி அருகில் அதிவேகமாக வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற கார், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீதி மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. 

இம்மாதம் 21ஆம் தேதி நடக்க இருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல்களில் அதிமுகவை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக களம் இறங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் எப்படியாவது இந்த இரண்டு தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற வேண்டுமென முன்கூட்டியே அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் இவ்விரண்டு தொகுதியிலும் முகாமிட்டு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக ஒருபக்கம் இப்படி இருக்க, திமுகவும் அதற்கு இணையாக களத்தில் இறங்கி  அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்படி ஒரு சமயத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தேர்தல் பிரச்சாரத்திற்காக நாங்குநேரி அருகே அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

காயம் அடைந்த நபரை மீட்டு, அமைச்சர் விஜயபாஸ்கர்அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு அஏற்பட்டு உள்ளது.