தன்னை திணித்து கொண்டு முன்னெச்சரிக்கை விவகாரங்களில் இறங்கி வருகிறார் விஜயபாஸ்கர். இந்த ஆஸ்பத்திரி, அந்த ஆஸ்பத்திரி என ஒன்றையும் விட்டுவைப்பதில்லை. திடீர் திடீர் என ஆய்வுக்கு செல்கிறார்.

 பஸ் ஸ்டேண்டுகளுக்கு செல்கிறார். ஏர்போர்ட்டுகளுக்கு செல்கிறார். கிருமிநாசினிகள் அடிக்கப்பட்டு வருகிறதா, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எப்படி உள்ளன என்ற ஆய்வுகளை நேரடியாகவே கண்காணிக்கிறார். 

 சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரங்களில் மட்டுமன்றி, மருத்துவ ஊழியர்களை நேரடியாக களமிறக்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதிலும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். சட்டசபை கூட்டம், முதல்வர் தலைமையிலான ஆய்வுகூட்டம், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் அனைத்திலும் பங்கேற்கிறார். சுறுசுறுப்பு இந்த செயல்பாடுகளை பார்த்துதான் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோரும் சட்டசபையில் பாராட்டு தெரிவித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த்தும் இதை மனமார பாராட்டினார். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி சட்டசபையில் பேசும்போது, "விஜயபாஸ்கர் மிக சுறுசுறுப்பாக செயல்படுகிறார். அவர் சீனா நாட்டுக்கும் சென்று உரிய ஆலோசனை வழங்க வேண்டும்" என்றுகூட சொன்னார். அந்த வகையில் நடிகைகள் குஷ்பு, கஸ்தூரி போன்றோரும் விஜயபாஸ்கருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் அவரைப்போலவே பொறுப்புடன் அவரது மகள் கொரோனா விழிப்புணர்வுக்காக பாட்டுப்பாடி நடனமாடி உள்ளார் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.