தமிழகத்தில் முதல் முறையாக, 9.44 லட்சம்ரூபாய்க்கு, கேரளாவில் இருந்து இந்த  சாக்கடை அடைப்பு நீக்கும் ரோபோ வாங்கப்பட்டு தனது அமைச்சர் வேலுமணி தனது அடுத்த அதிரடியை தொடங்கியிருக்கிறார்.   

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்ற் தன் சொந்த மாவட்டமான கோயமுத்தூரில், டீ ஷர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்து பைக்கை ஓட்டியபடி பல இடங்களுக்கு சென்று பணிகளை பார்வையிட்டார். கூடவே தனக்குப் பிடித்த பழைய உணவகம் ஒன்றில், கட்சியின் கடைநிலை நிர்வாகிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். சோஷியல் மீடியாவில் இது குறித்த படங்கள் பரபரப்பாகிக்  கொண்டிருக்கும் வேலையில்,  அமைச்சர் வேலுமணி தனது அடுத்த அதிரடியை தொடங்கியுள்ளார்.

பாதாள  சாக்கடையில் மனிதர்கள் இறங்கி  சுத்தம் செய்வதை தவிர்ப்பதற்காக, 9.44 லட்சம்ரூபாய்க்கு, கேரளாவில் இருந்து  ரோபோவை வாங்கி அறிமுகபடுத்தியிருக்கிறார் அமைச்சர் வேலுமணி.

பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கும் ‘‘ரோபோ’’ எந்திரம் தமிழகத்தில் முதல் முறையாக கும்பகோணத்தில்  கடந்த 21 ஆம் தேதி  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாதாள  சாக்கடையில் மனிதர்கள் இறங்கி  சுத்தம் செய்வதை தவிர்ப்பதற்காக இந்த ரோபோ அறிமுகம் செய்பபட்டுள்ளது.

பாதாள சாக்கடை குழாய்களில், துப்புரவு தொழிலாளிகள் இறங்கி, சுத்தம் செய்யக்கூடாது' என, உச்ச நீதிமன்றம்  உத்தவிட்டுள்ளது. இதையடுத்து.பாதாள சாக்கடைகுழாய்களில் அடைப்பு ஏற்படுவதை அப்புறப்படுத்த, கேரளாவை சேர்ந்த, விமல் கோபிநாத் என்ற பொறியாளர்கள் உருவாக்கியுள்ள, ரோபோ இயந்திரத்தைப் பயன்படுத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக, கும்பகோணம் நகராட்சியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு திட்ட நிதியில், 9.44 லட்சம்ரூபாய்க்கு, கேரளாவில் இருந்து இந்த  சாக்கடை அடைப்பு நீக்கும் ரோபோ வாங்கப்பட்டு கும்பகோணம் நகராட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகளை நீக்கும், இந்த ரோபோவில் 7 கேமராக்கள் பொருத்தப்பட்டு அது கண்காணிப்பு மானிட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தை சாக்கடைக்கும் இறக்கினால் அது நான்கு புறமும் சுற்றிச் சுழன்று அடைப்புகளை சுத்தம் செய்யும். மூலைமுடுக்குகளில் எல்லாம் நுழைந்து அடைப்பை சரி செய்வதுடன், உள்ளே உள்ள கழிவுகளை பக்கெட்டில் சேகரித்து கயிறு மூலம் வெளியே கொண்டுவந்து தள்ளி விடும். சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும்போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவே இந்த எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.