தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த சில நாட்களாக பரபரப்பின் மையப்புள்ளியாகி இருக்கிறார். ’மத்தியில் ஆள்வது பா.ஜ.க.வோ அல்லது காங்கிரஸோ! யாராக இருந்தாலும் தமிழக உரிமையை ஒருபோதும் விட்டுத்தரமாட்டோம்.’ என்று சமீபத்தில் ஒரு பேட்டி தட்டி தமிழக பா.ஜ.க.வுக்கு செம்ம இனிமா கொடுத்தார். 

இதன் மூலம் தமிழக அரசியல் தாண்டி டெல்லி வரை பெரும் பரபரப்புக்கு ஆளானார் வேலுமணி. 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்ற் தன் சொந்த மாவட்டமான கோயமுத்தூரில், டீ ஷர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்து பைக்கை ஓட்டியபடி பல இடங்களுக்கு சென்று பணிகளை பார்வையிட்டார்.

(இரு சக்கர வாகனத்தில் வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட  பின்னால் வந்தவர்கள் என யாருமே ஹெல்மெட் அணியாதது குறிப்பிடத்தக்கது)

கூடவே தனக்குப் பிடித்த பழைய உணவகம் ஒன்றில், கட்சியின் கடைநிலை நிர்வாகிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். சோஷியல் மீடியாவில் இது குறித்த படங்கள் பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. 

இந்த சூழலில், ஸ்டாலினையும் போகிற போக்கில் வெளுத்தெடுத்திருக்கிறார் வேலுமணி. சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வானது மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்! என்று ஸ்டாலின் கூறினார். லோக்சபாவில் எம்.பி.க்களே இல்லாத ஸ்டாலின் எப்படி நம்பிக்கை ஓட்டெடுப்பு பற்றிப் பேசுகிறார்? அவர் இது பற்றி கருத்து பேசுவதற்கான அவசியம் என்ன? என்பது புரியவில்லை.

மத்திய அரசில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்த தி.மு.க., தமிழர்களின் நலனுக்காக என்ன நடவடிக்கை எடுத்தது?” என்று கேட்டுள்ளார்.