முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வலது கரமாக இருந்த அமைச்சர் வேலுமணியை கோவை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வேலுமணிக்கு பதிலாக சுகுமாரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

அமைச்சர் வேலுமணி கோவை புறநகர் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். அதிமுக எடப்பாடி அணி ஒபிஎஸ் அணி என இரண்டாக பிளவடைந்த போது அவற்றை இணைப்பதில் முக்கிய  பங்கு வகித்து வந்தவர் அமைச்சர் வேலுமணி. 

இதையடுத்து இரு அணிகளும் ஒன்றாக இணைந்தபோது, சசிகலாவை நீக்குவோம் என எடப்பாடி தரப்பு அறிவித்தது. இதனால் சினங்கொண்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக போர்கொடி தூக்கி திணறடித்து வருகின்றனர். 

தினகரன் பங்குக்கு எடப்பாடி நிர்வாகிகளை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். 
அனைத்திற்கும் மேலே போய் எடப்பாடியையே சேலம் மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் டிடிவி. அவரைத்தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை நீக்குவதாக அறிவித்தார். 

அந்த வரிசையில், தற்போது,  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வலது கரமாக இருந்த அமைச்சர் வேலுமணியை கோவை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வேலுமணிக்கு பதிலாக சுகுமாரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.