Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கு... உயர்நீதிமன்றம் தள்ளுபடி..!

உள்ளாட்சித்துறை முறைகேடு தொடர்பாக தன்னை தொடர்புபடுத்தி அவதூறு கருத்துக்களை பரப்பிய அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Minister velumani case...chennai high court dismissed
Author
Tamil Nadu, First Published Jun 3, 2019, 3:55 PM IST

உள்ளாட்சித்துறை முறைகேடு தொடர்பாக தன்னை தொடர்புபடுத்தி அவதூறு கருத்துக்களை பரப்பிய அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Minister velumani case...chennai high court dismissed

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கி, அதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. இதுகுறித்து அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியும் கொடுத்தனர்.Minister velumani case...chennai high court dismissed

இந்நிலையில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்ப அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அமைச்சர் வேலுமணியும், 9 நிறுவனங்கள் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கோடை விடுமுறை காலம் முடிந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூற அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி, அமைச்சர் வேலுமணி மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios