Minister vaikai said that the work should be done properly

மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபிக்காமல் தனக்கான வேலைகளை சரிவர செய்து முடிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வனுக்கும் தர்போதைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் ஏகா பொருத்தம் தான்.

பாலில் கலப்படம் உள்ளது என ராஜேந்திர பாலாஜி குற்றசாட்டு எழுப்பிய நாள் முதலே வைகை செல்வன் அவருக்கு எதிராக பல முரன்பட்ட கருத்துக்களை கூறி வருகிறார்.

இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நிகழ்த்தி இரண்டு மிகப்பெரும் தனியார் பால் பவுடர் கம்பெனிகளில் கலப்படம் நடந்திருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

அப்போது தன்மீது குற்றம் சுமத்திய வைகை செல்வன் சீக்கு வந்த பிராய்லர் கோழி, கூலி பேச்சாளன் என கடுமையாக விமர்சித்தார்.

இதைதொடர்ந்து, இன்று காலை பேசிய வைகை செல்வன் மது குடித்த குரங்கு போல பேசி வருகிறார் ராஜேந்திர பாலாஜி என பதிலடி கொடுத்தார்.

பின்னர், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இதுகுறித்து வைகை செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாகவது:

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருளை தடை செய்வதை விட்டுவிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெறுமன பேசி கொண்டே இருப்பது கவலை அளிக்கிறது.

தனியார் பாலில் கலப்படம் இருக்கிறது என ஓலமிட்டு வரும் அவர் ஓராண்டு காலமாக என்ன செய்து கொண்டு இருந்தார்.

ஒரே கட்சியில் இருந்து கொண்டு ஏன் தரமற்ற விமர்சன்ங்களை முன் வைத்து வருகிறீர்கள் ராஜேந்திர பாலாஜி.

தொடக்க காலத்தில் புரோக்கர் தொழிலை ஆரம்பித்த ராஜேந்திர பாலாஜி தற்போது விருதுநகர் மாவட்டத்தில் மிகப்பெரிய அரசியல் புரோக்கராக மாறியுள்ளார்.

மேலும் அவர் பல சட்ட விரோத செயல்களில் செய்து இதுவரை எதிலும் சிக்காமல் தப்பித்து வருகிறார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மது குடித்த குரங்கு போல் செய்தியாளர்கள் மத்தியில் குரங்கு சேட்டை செய்து வருகிறார். இது மிகவும் கண்டிக்கதக்கது.

அமைச்சர் பதவி ஒன்றும் பரம்பரை சொத்து கிடையாது. தனியார் பாலில் கலப்படம் என்று மைக் முன்னால் கத்துவதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும்.

ராஜேந்திர பாலாஜியை பார்க்கும் போது மணிக்கு ஒருமுறை மங்குனி அமைச்சர் என்பதை நிரூபித்து கொண்டே இருக்கிறீர்கள் என்ற காமெடி தான் நினைவுக்கு வருகிறது.

அழுகி போன தக்காளி, சீக்கு வந்த கோழி, பெண்களை மதிக்க தெரியாதவன், கூலிப்பேச்சாளன், அரசியல் விபச்சாரி என ஒரு அமைச்சர் பேசுவதை பார்த்து மக்கள் இவர் அமைச்சர் தானா என கேள்வி எழுப்புகின்றனர்.

தக்காளி அழுகி போனால் தப்பில்லை. ஆனால் மனிதன் தான் அழுகி போகக்கூடாது.

எனது தாயோடும், எனது மனைவியோடும், இரண்டு பெண் குழந்தைகளோடும் எளிய வாழ்க்கையை வாழ்வதற்கும், பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதையும் என் குடும்பம் எனக்கு பாடம் நட்த்தியிருக்கிறது.

அதை ராஜேந்திர பாலாஜி எனக்கு சொல்லித்தர தேவை இல்லை. 2011 ல் இருந்து 2016 வரை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பல அமைச்சர்களை மாற்றி உள்ளார், அவர்களெல்லாம் பெண்கள் விஷயத்தில் தவறு செய்தவர்ளா?

எனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கீழ்தனமான எண்ணங்களை விட்டு விட்டு துறையில் கவனம் செலுத்த வேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு வைகை செல்வன் அறிக்கையில் கூறியுள்ளார்.