பாஜகவினர் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளுக்குச் சென்று சாப்பிட்டால் அவர்கள் தூய்மை யானவர்கள் ஆகிவிடமாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் உமா பாரதியிடம் நிருபர்கள் நீங்கள் ஏன் தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டில் சாப்பிடச் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த உமா பாரதி,  நான் எங்கு சாப்பிடவேண்டும், ஏன் சாப்பிடவேண்டும் என்பது எனது தனிப்பட்ட உரிமை, நான் தாழ்த்தப்பட்ட மக்களின் வீட்டில் போய் சாப்பிடுவதால் அவர்களுக்கு எந்த ஒரு பயனும் ஏற்படாது என்றார்.

நான் அவ்வாறு செய்வதால் பொதுமக்கள் தாழ்த்தப்பட்ட மக்களை மதிப்பார்கள் என்ற எண்ணமும் எனக்கு ஏற்படவில்லை, வேண்டுமென்றால் அவர்கள் என் வீட்டிற்கு வந்து சாப்பிடட்டும், அதைத்தான் நான் சமூக வலை தளத்திலும் கூறினேன் என தெரிவித்தார்.

பாஜகவினர் கடந்த சில ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களை ஈர்க்கும் விதத்தில் அவர்களின்  வீட்டில் சாப்பிடும் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். கடந்த மாதம் 22 ஆம் தேதியன்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தாழ்த்தப்பட்ட ஒருவர் வீட்டில் சென்று சாப்பிட்டார்.

அப்படிச் சாப்பிடும்போது பார்ப்பனர்கள் வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவு பார்ப்பனர்கள் வீட்டுப் பாத்திரத்தில் பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

அதேபோல் யோகியுடன்  வந்த பாஜக பிரமுகர்கள் மற்றும் அரசுஅதிகாரிகளும் தங்களின் வீட்டிலிருந்தே சாப்பாடும், தட்டும் கொண்டு வந்திருந் தனர்.   இந்த நிலையில் பாஜகவி னரின் உண்மை மனநிலையை மத்திய அமைச்சர் உமாபாரதி வெளிக்கொண்டு வந்துவிட்டார் என்று ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.