Asianet News TamilAsianet News Tamil

கடல் நீர் காலில் படக்கூடாது என நினைப்பவர் மீன்வளத் துறை அமைச்சரா.? வெட்கக்கேடு.. அலறவிட்ட ஜெயக்குமார்.!

கடல் தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதைக் கூட தாங்க முடியாத ஒருவரா மீன்வளத்துறைக்கு அமைச்சர் என்று அனிதா ராதாகிருஷ்ணனை முன்னாள் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
 

Minister thinks that the Fisheries Department should not be at the feet of sea water.? Shame .. Jayakumar who screamed.!
Author
Chennai, First Published Jul 8, 2021, 9:14 PM IST

பழவேற்காட்டில் உப்பங்கழி ஏரியும், கடலும் சந்திக்கும் முகத்துவாரப் பகுதியில் ஏற்பட்ட மணல் அரிப்பால் நுழைவுவாயில் அடைபட்டுள்ளது. இதனால் மீனவர்களின் படகுகள் தரைதட்டி பழுதாகி பெரும் பொருளாதாரச் செலவுகள் ஏற்படுகின்றன. இதை ஆய்வு செய்வதற்காக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பழவேற்காடு வந்தார். ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ், எம்.எல்.ஏ.க்களுடன் சென்று ஆய்வு செய்தார்.Minister thinks that the Fisheries Department should not be at the feet of sea water.? Shame .. Jayakumar who screamed.!
ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், படகிலிருந்து இறங்கி உப்பங்கழி நீரில் காலை வைக்கத் தயங்கினார். அப்போது அங்கிருந்த மீனவர்கள் இருவர், அனிதா ராதாகிருஷ்ணனை அலேக்காக கைகளில் அமரவைத்து கரை சேர்த்தனர். அமைச்சர் அனிதா ராதாகிருஷண்னனை மீனவர்கள் தூக்கி செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் இந்தச் செயலை முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

Minister thinks that the Fisheries Department should not be at the feet of sea water.? Shame .. Jayakumar who screamed.!
இதுதொடர்பாக ஜெயக்குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “பாவம் திமுக அமைச்சருக்கு தண்ணீரில் கண்டம்.. கடல்தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதைக் கூட தாங்க முடியாத ஒருவரா மீன்வளத்துறைக்கு அமைச்சர்.. வெட்கக் கேடு...” என்று விமர்சித்துள்ளா.

Follow Us:
Download App:
  • android
  • ios