எடப்பாடி கூட்டத்துக்கு வந்தபோது அதிர்ச்சி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மின்சார துறை அமைச்சர் தங்கமணி, தலைமை செயலகம் சென்று கொண்டிருந்தார். அப்போது கடற்கரை சாலையில், அமைச்சரின் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென குறுக்கே வந்த தண்ணீர் லாரி 'படார்' என மோதியது.

இதில், அமைச்சரின் கார் பலத்த சேதமடைந்தது. தண்ணீர் லாரி வேகமாக மோதியதால், அமைச்சர் மற்றும் உடன் வந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது 

பலத்த காயமடைந்த காரை மற்றொரு வாகனத்தின் மூலம், இணைக்கப்பட்டு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் கார் மீது, தண்ணீர் லாரி ஒன்று நேருக்குநேர் மோதியது, பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்போது அமைச்சர் தங்கமணி நலமுடன் இருப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.