தமிழக சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரின்ஸ், மதுபானங்களின் தரம் குறைவாக உள்ளதாகவும், அதைக் குடிப்பதால், சிறுநீரக கோளாறுகள் வருவதாகவும், உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.


இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, உடனடியாக, அனைத்து மதுக்கடைகளையும் மூடினால், கள்ளச்சாராயம் புகுந்துவிடும் என்பதாலேயே, படிப்படியாக, மதுக்கடைகள் குறைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில், 6 ஆயிரத்து 132ஆக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 152 கடைகளாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது. மதுபானம் அருந்துவோர் அளவாக குடித்தால், பிரச்சினை இல்லை. அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும்.அதற்கொல்லாம் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என  அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

அமைச்சரே கூறிவிட்டதால், இனிமேல், மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு,' என்று மதுபாட்டில்களில் அச்சிடுவதற்கு பதிலாக, 'அளவா குடிங்க ; உடலுக்கு நல்லது,' என்று அச்சிடவேண்டியதுதான் எம்எல்ஏ ஒருவர் கூற அவையே சிரிப்பில் ஆழ்ந்தது.