எதிர்கட்சி தலைபர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு சொல்லகூடிய குண்டர்கள் , ரவுடிகள் எல்லாம், அவரது கட்சி சேர்ந்த சேர்ந்தவர்களை , குறிப்பாக முன்னாள் அமைச்சர்களாக இருந்தவர்களை தான் குறிப்பிடுகிறாரோ என்று ஐயம் எழுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசு யார் மீதும் பொய் வழக்கு போடவில்லை என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியை மறைக்க பேட்டி என்ற பெயரில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதங்கத்தை கொட்டிவிட்டு சென்றுள்ளார் என்று விமர்சித்தார்.
மேலும் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அதிமுகவினரால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்து திமுக வெற்றி பெற்றுள்ளது என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
நீட் விலக்கு என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளதாக தெரிவித்த அவர் நீட் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கும் அரசு திமுக அரசு இல்லை என்று கூறினார். மேலும் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கை கடைசிவரை போராடி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுத்தருவார் என்றார். நீட் விஷயத்தில் திமுக அரசு போராடி நல்ல முடிவை பெற்றுத் தரும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை மறைக்க, தன் ஆதங்கத்தை செய்தியாளர்களிடம் கொட்டியிருக்கிறார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ற அவர் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் அதிமுக விரக்தி அடைந்துள்ளதாகவும் தேர்தல் முறைகேடு பற்றி அதிமுக பேசக்கூடாது எனவும் காட்டமாக குற்றச்சாட்டினார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மனித உரிமை மீறலில் ஈடுபட்டதால் தான், அவர் கைது செய்யப்பட்டார். எனவே யார் மீதும் திமுக அரசு பொய்வழக்கு போடவில்லை என்று அமைச்சர் விளக்கினார். மேலும் நடந்த முடிந்த உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில், மிக சரியான வகையில், ஜனநாயக பாதையில் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் சட்ட ஒழுங்கிறகு சிறு குறையோ பங்கமோ ஏற்படாத வகையில் மிக அமைதியான முறையில் நடைபெற்றது என்றார்.
இன்றைக்கு இந்த தேர்தலில் குண்டர்கள், ரவுடிகள் இறக்கப்பட்டு கள்ள ஓட்டுகள் போடுவதற்கு தயார் செய்தார்கள் என்று சொல்லுகிறார் எடப்பாடி பழனிசாமி, நான் கேட்கிறேன், அவரது கட்சியிலிருந்து தேர்தல் வேலை பார்த்தவர்களையெல்லாம் அவர் அப்படி குறிப்பிடுகிறாரா என்று கேள்வியெழுப்பினார். முதலமைச்சருக்கு மக்கள் கொடுத்துள்ள சிறப்பான அங்கீகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் புழுங்கி போய் , இந்த வெற்றியை ஏதோ முறைகேடாக பெற்றதாக மாயதோற்றத்தை வலிந்து உருவாக்க அவர் முயற்சி செய்கிறார் என்று அமைச்சர் குற்றச்சாட்டினார்.
மூத்த அமைச்சராக இருந்த ஜெயக்குமார் தேர்தல் நேரத்தில் எவ்வாறு நடந்துக்கொண்டார் என்பது எல்லாரும் அறிவர். மனித உரிமைகளை முற்றிலுமாக மீறக்கூடிய வகையில் அந்த நபருடைய சட்டையை கழற்றி, பின்பக்கமாக கையை கட்டி, தெருவில் தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்தார். அப்படி பார்த்தால் எடப்பாடி பழனிசாமி குறிப்பிடுக்கிற குண்டர்கள் , அவர் பேட்டியில் சொல்லக்கூடியர்வர் எல்லாம், அவரது கட்சி சேர்ந்த சேர்ந்தவர்களை , குறிப்பாக மூன்னாள் அமைச்சர்களாக இருந்தவர்களை தான் குறிப்பிடுகிறாரா என்று ஐயம் எழுகிறது என்று தெரிவித்தார்.
