சென்னை மாநகரத்தில் உள்ள 10 லட்சம் கட்டடங்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் இருமல் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என ஆய்வு செய்ய மாதம் 15 ஆயிரம் ஊதியம் மதிப்பில் கூடுதலாக 16 ஆயிரம் ஊழியர்களை  நாளை முதல் பணி அமர்த்தப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அறிவித்துள்ளார் .  கொரோனா தோற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசனை  நடைபெற்றது அதில் மாநகராட்சி ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்குதல் இரண்டு மாதத்திற்கு கிருமி நாசினிகள் கையிருப்பு வைத்துக்கொள்ளுதல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் சூடாகவும் சுவையாகவும் உணவு வழங்குவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் . 

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது  நகராட்சிகளில் மண்டல வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . பொது இடங்களில்  கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது ,  1586 விசைத் தெளிப்பான்கள் இதுவரை 79, 940 லிட்டர் லைசால் நீரில் கலக்கப்பட்டு பொது இடங்களில் தெளிக்கப்பட்டு உள்ளது .  மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இதுவரை ஆறு லட்சத்து 9 ஆயிரத்து நானூற்று 12 லிட்டர் சோடியம் ஹைட்ரோ குளோரைடு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது .  247 அம்மா உணவகங்களுக்கு முதல்கட்ட நிதியாக 31. 39 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பெருநகர சென்னை மாநகராட்சி விரிவான பணிகளை செயல்படுத்தி வருகிறது .  

இதில்  மிக முக்கிய பணியான மாநகர முழுமையிலும் அனைத்து வீடுகளிலும் தினந்தோறும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு காய்ச்சல் இருமல் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை சென்னை மாநகராட்சி பெருமக்கள் ஆய்வு செய்து அதில் சாதாரண சளி மற்றும் காய்ச்சல் ஆக இருப்பின் அதற்கான மருத்துவம் மாநகராட்சி மூலம் அளிக்கவும் மேல் சிகிச்சை தேவைப்படும் பொது சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க சென்னை மாநகராட்சியால் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு மாநகரம் முழுவதும் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இப்படி சென்னை மாநகராட்சியின் மொத்த பரப்பளவில் உள்ள சுமார் 10 லட்சம் கட்டிடங்களின்   75.100 கட்டடங்கள் என்ற வகையில் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் சுமார் 13 ஆயிரத்து 500 கூறுகள் உருவாக்கப்படும் ,  இவை அனைத்து பணிகளையும் நேரடியாக கண்காணிப்பு செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி 16,000 ஊழியர்கள் களத்தில் பணியாற்ற உள்ளனர் .  இந்த ஊழியர்கள் 75.100 வீடுகளை நாளை முதல் தினந்தோறும் தொடர்ந்து 90 நாட்களுக்கு இடைவிடாது தொடர்ந்து ஆய்வு செய்து தினமும் அதற்குண்டான பதிவுகளை உரியமுறையில் மேற்கொள்வார்கள் .  

இதன் மூலம் பொதுமக்களின் ஆரோக்கியம் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஒரு அமைப்பினை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது .  இந்த  களப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு மாதந்தோறும் 15,000 ரூபாய் மதிப்பில்  ஊதியம் வழங்கப்படும் ,  நிவாரண பணிகளுக்கு உரிய பாதுகாப்பு களுக்கு வருகை புரியும் சென்னை மாநகராட்சியின் களப் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.